கருணாநிதி வீடு முற்றுகை: 200 மீனவர்கள் கைது
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி வீட்டை முற்றுகையிட புறப்பட்ட 200 மீனவர்களை போலீஸார் கைது செய்தனர்.
சிங்களர்களின் தூண்டுதலினாலேயே இங்குள்ளவர்கள் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றுகருணாநிதி கூறியதைக் கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அனைத்து மீனவர்கள்சங்கங்கள் முடிவு செய்தன.
இன்று காலை அகில இந்திய மீனவர் சங்க தலைவர் ராஜா தலைமையில் 200 பேர் கடற்கரையில் காந்தி சிலைஅருகே கூடினர். பின்னர் அவர்கள் கருணாநிதி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த புறப்பட்டனர்.அப்போது அங்கிருந்த போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
கருணாநிதிக்கு மருத்துவ சோதனை:
கருணாநிதிக்கு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல்நலப் பரிசோதனை செய்யப்பட்டது.
ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கருணாநிதிக்குசி.டி. ஸ்கேன், தாலியம் சோதனை,எக்கோ கார்டியோகிராம், சிறுநீர் பரிசோதனை ஆகியவை செய்யப்பட்டன.
இருதய நோய் நிபுணர் தணிகாச்சலம் கருணாநிதியின் உடல் நிலையை பரிசோதித்தார். இதன் பின்னர், அவர்நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் கூறியதையடுத்து கருணாநிதி வீடு திரும்பினார்.
இது வழக்கமாக நடத்தப்பட்ட பரிசோதனைகள்தான் என்று கருணாநிதி குடும்பத்தார் தெரிவித்தனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications