கும்பகோணம்: நீதி விசாரணை முடிந்தது

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீவிபத்தில் 90 குழந்தைகள் பரிதாபமாக இறந்து போன சம்பவம் குறித்துவிசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி சம்பத் தனது விரிவான விசாரணையை முடித்துள்ளார்.

கும்பகோணம் பள்ளிக் கூட தீவிபத்து தொடர்பான பல்வேறு அம்சங்களை விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்றநீதிபதி சம்பத் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை தமிழக அரசு அமைத்தது.

இதையடுத்து நீதிபதி சம்பத் தனது விசாரணையை கும்பகோணத்தில் மேற்கொண்டார். தஞ்சாவூரில் அவர் இறுதிக்கட்ட விசாரணையை நடத்தினார். இதுவரை மொத்தம் 235 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

பலியான குழந்தைகளின் பெற்றோர்கள், காயமடைந்த சிறுவர்கள், கிருஷ்ணா பள்ளியின் பிற மாணவர்கள் இதில்அடங்குவர். பொதுமக்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி,வருவாய் ஆய்வாளர், டி.எஸ்.பி, நகராட்சி ஆணையர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.விசாரணை அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+