தென் மாவட்டங்களில் தீவிரமடைகிறது கன மழை!
சென்னை:
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதால் அடுத்த 2நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில்கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. மதுரையில் நேற்றிரவு முழுவதும் தொடர்மழை பெய்தது.
இந் நிலையில் இன்றும் மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும்கன மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக செங்கோட்டையில் 8 செமீ மழைபெய்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால்குற்றாலத்தில் உள்ள அருவிகளில் அதிக அளவில்நீர் கொட்டி வருகிறது.
மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து கணிசமான அளவு அதிகரித்துள்ளது. தற்போது அணையின்நீர்மட்டம் 89 அடியாக உள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications