மீனவர்களுக்கு எதிராக பேசியது இல்லை: கருணாநிதி
சென்னை:
மீனவர்களுக்கு எதிராக எப்போதும் பேசியது இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்களுக்கு எந்த தீமையும், தொழில் இழப்பும் ஏற்படாது என்றும், பவளப் பாறைகள் அழிக்கப்படாதுஎன்றும் அப் பகுதி மீனவர்களிடம் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் இத்திட்டம் நிறைவேறினால் திமுகவுக்குப் பெருமையும், புகழும் அதிகரிக்கும் என்ற பொறாமை காரணமாக சிலர் திட்டமிட்டுமுற்றுகைப் போராட்டங்கள் நடத்துகின்றனர்.
ஆளுநரை மாற்றாததால்தான் பிரதமரை வரவேற்க நான் கொடைக்கானலில் இருந்து வரவில்லை என்று கூறுகிறார்கள். வந்திருந்தால்ஆளுநரை மாற்றுவதற்கு நிர்பந்திப்பதற்காகத் தான் வந்தேன் என்று சொல்லி இருப்பார்கள்.
மருதுபாண்டியர் சகோதரர்கள் நினைவு தபால் தலை வெளியீட்டு விழாவில் முதல்வர் ஜெயலலிதாவையோ, அவருடைய அரசையோகுற்றம் சொல்லவில்லை என்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் என்னிடம் கூறினார்.
தபால் தலை வெளியீட்டில் யார் உரிமை கொண்டாடினாலும், அதை வெளியிடுவதற்கான முழு பொறுப்பையும் ஏற்கும் உரிமை கொண்டதுதயாநிதி மாறனை அமைச்சராகக் கொண்ட துறைதான் என்பதை யாரும் மறைத்துவிட முடியாது.
ஜெயலலிதா அளித்த விளக்க அறிக்கையில், அப்போதிருந்த வாஜ்பாய் அரசு மருதுபாண்டியர் தபால் தலை வெளியிட வைக்கப்பட்டகோரிக்கைகளை எத்தனை முறை மறுத்துள்ளது என்பது தேதி வாரியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படைத் தலைவர் விஜயகுமார் 350 கி.மீ. தூரம் பாதயாத்திரை செல்வதாகஅறிவித்துள்ளார். அரசின் வழியில் அவரும் செல்கிறார் என்பதையே இது காட்டுகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications