மீண்டும் பள்ளிக்கு திரும்பிய வீரப்பன் மகள்கள்

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

வீரப்பனின் மகள்கள் இருவரும் தங்களது தந்தையின் இறுதிச் சடங்குகள் முடிந்த நிலையில் மீண்டும் பள்ளிக்குத்திரும்பினர்.

தமிழக அதிரடிப்படை வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட வீரப்பனுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் வித்யாராணிகோவையில் உள்ள பள்ளியில் பத்தாவது வகுப்புப் படித்து வருகிறார். இளைய மகள் பிரபா கடலூர்கூத்தப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளியில் ஏழாவது வகுப்புப் படித்துவருகிறார்.

தந்தையின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக பிரபா தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார். இந் நிலையில்ஈமச் சடங்குகள் முடிந்த நிலையில் பிரபா மீண்டும் பள்ளிக்குத் திரும்பினார்.

வழக்கறிஞர் புருஷோத்தமன், வீரப்பனின் உறவினர் ஒருவர் ஆகியோர் பிரபாவை கூத்தப்பாக்கம் அழைத்துவந்தனர். பள்ளி முதல்வரான சகோதரி எபி பெனி பிரபாவை வரவேற்றார். மீண்டும் பிரபா தங்களது பள்ளியில்படிக்க வந்துள்ளது மகிழ்ச்சி தருவதாக எபி பெனி தெரிவித்தார்.

பின்னர் வழக்கறிஞர் புருஷோத்தமன் கூறுகையில், இந்தக் கல்வியாண்டு இறுதி வரை இதே பள்ளியில் பிரபாதொடர்ந்து படிப்பார். அதன் பிறகு பிரபாவை எங்கு படிக்க வைப்பது என்பது குறித்து அவரது தாயார் முத்துலட்சுமிமுடிவு செய்வார் என்றார்.

பின்னர் பிரபா பேசுகையில், நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக விரும்புகிறேன். கலெக்டர் ஆவதுதான் எனது லட்சியம்என்றார்.

அதேபோல் வித்யாராணியும் பள்ளிக்குத் திரும்பினார். இவர் கோவை தடாகம் சாலையிலுள்ள செயின்ட் பால்ஸ்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். வீரப்பனின் இறுதிச் சடங்குகள் முடிவடைந்த நிலையில் உறவினர்கள்வித்யாராணியை பள்ளியில் கொண்டு வந்து மீண்டும் சேர்த்தனர்.

இது குறித்து பள்ளி முதல்வர் டேவிட் கூறுகையில்,

வித்யாராணி நன்றாக படிக்கிறாள். விளையாட்டிலும் தனது திறமையை காட்டுகிறாள். மண்டல மற்றும் மாவட்டஅளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை பெற்றுள்ளார். சக மாணவிகளுடன் நன்கு பழகும்மனப்பான்மையைக் கொண்டுள்ளார். வீரப்பனின் மகள் என்று நாங்கள் வித்தியாசம் பார்ப்பதில்லை. மற்றமாணவிகளைப் போலவே வித்யாராணியையும் நடத்துகிறோம் என்றார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+