4,000 பேர் பங்கேற்கும் அதிரடிப்படை பாராட்டு விழா
சென்னை:
சென்னையில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள அதிரடிப் படையினருக்கான பாராட்டு விழாவில் மொத்தம்4,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
வீரப்பனையும், கும்பலையும் சுட்டுத் தள்ளிய தமிழக அதிரடிப் படையினருக்கு தமிழக அரசின் சார்பில் சென்னைநேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடக்கிறது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள போதிலும், அதைப் பொருட்படுத்தாமல்விழாவுக்கான பிரமாண்டமான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
விழாவில் அதிரடிப்படையினர் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது, வனத்துறையினர், முன்னாள் அதிரடிப்படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோரும் கலந்து கொள்ள அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அதிரடிப் படையைச் சேர்ந்த 764 பேர், இதற்கு முன்பு இருந்த படையில் இடம் பெற்றிருந்த 348 பேர், தற்போதையமற்றும் முன்னாள் அதிரடிப்படை வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 2,975 பேர், வனத்துறையினர் 51 பேர் மற்றும்அவர்களது குடும்பத்தினர் 102 பேர் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
இதில் கலந்து கொள்ள நேற்று காலை முதலே சத்தியமங்கலம், கடம்பூர், ஆசனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளஅதிரடிப்படை முகாம்களில் இருந்த வீரர்கள் தங்களது சொந்த ஊருக்குக் கிளம்பிச் சென்றுவிட்டனர். இன்று காலைமுதல் அவர்கள் குடும்பத்தினருடன் சென்னை வர ஆரம்பித்துவிட்டனர். இவர்களுக்கு தங்குவதற்கும் அரசேவசதிகள் செய்து தந்துள்ளது.
இன்று மாலைக்குள் அனைவரும் சென்னைக்கு வந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாளைஅதிரடிப்படை வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபடவுள்ளனர்.
நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் இந் நிகழ்ச்சியில் மாஸ்டர் கலா தலைமையில் 40க்கும் மேற்பட்டசினிமா நடனக் கலைஞர்களின் டான்ஸ் நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சைவ, அசைவ விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விருந்து நிகழ்ச்சியில் முதல்வர்ஜெயலலிதாவும் பங்கேற்கிறார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா!












Click it and Unblock the Notifications