இது இரு வீட்டார் முடிவு: தனுஷ்
சென்னை:
இதுவரை நானும், ஐஸ்வர்யாவும் காதலிக்கவில்லை. இது இரு வீட்டாரும் பேசி முடிவு செய்த திருமணம் இது.திருமணத்திற்குப் பின்னர்தான் ஐஸ்வர்யாவைக் காதலிக்கவுள்ளேன் என்று தனுஷ் கூறினார்.
சென்னை குட்லக் பிரிவியூ தியேட்டரில் செய்தியாளர்களை சந்தித்தார் தனுஷ். ரஜினி மருமகனாகப் போவதாலோஎன்னவோ வழக்கத்தை விட படு துறுதுறுப்பாக காணப்பட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இரு வீட்டாரும் கலந்து பேசி நவம்பர் 18ம் தேதிதிருமணம் என முடிவு செய்துள்ளார்கள். இது காதல் திருமணம் அல்ல. இரு வீட்டாரும் சேர்ந்து பேசி எடுத்தமுடிவுதான்.
திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்த நானும், ஐஸ்வர்யாவும் விரும்பியதால் திருமணத்தில் இரு வீட்டார்மட்டுமே கலந்து கொள்வார்கள். திருமண வரவேற்புக்கு அனைவரையும் நிச்சயமாக அழைப்போம்.
திருமணத்தை எங்கு நடத்துவது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. நானே திருமண செய்தியைத்தெரிவிக்கலாம் என்றிருந்தேன். அதற்குள்ளாக வெளியாகி விட்டது. திருமண செய்தியை ரஜினி வீடு மற்றும் எனதுவீட்டாரின் அனுமதி மற்றும் ஒப்புதலின்பேரில்தான் அறிவிக்கிறேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் திருமண தேதி முடிவு செய்யப்பட்டது. என்னை விட ஐஸ்வர்யா கூடுதல் வயதுகொண்டவர் என்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்யப் போவதால் ஒரு விதபதட்டத்துடன்தான் இருக்கிறேன்.
எனது கல்யாணத்திற்குப் பிறகு ரஜினி ரசிகர்கள் எனது ரசிகர்களாக மாறுவார்கள் என்று நீங்கள் கூறுவதைக்கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.
எனது அண்ணன் செல்வராகவனுக்குத் திருமணமாகும் முன்பே எனக்குத் திருமணமாவதால் ஒரு பிரச்சினையும்இல்லை. அண்ணன் முற்போக்கு எண்ணம் கொண்டவர், நான் அப்படி அல்ல. எனது திருமணத்திற்கு அவர் எந்தஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றார் தனுஷ்.
செல்வராகவன் இயக்க தனுஷ் நடிக்கும், ஒரு நாள் ஒரு கனவு படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற உள்ளது.திருமணம் முடிந்த பிறகு ஐஸ்வர்யாவுடன் தனுஷ் இப் படத்தின் சூட்டிங்கிற்காக வெளிநாடு பறக்கிறார்.
சுள்ளான் படத்தின்போதுதான் தனுஷ்-ஐஸ்வர்யா காதல் தீவிரமாகியுள்ளது. அந்தப் படத்திற்காக தனுஷ்வெளிநாடு சென்று விட்டு, அதிகாலையில் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய போது, அவரை வரவேற்கக்காத்திருந்தார் ஐஸ்வர்யா.
இதற்கிடையே ரஜினி, 50 கோடி ரூபாய் சொத்துக்களை அண்மையில்தான் ஐஸ்வர்யா பெயருக்குமாற்றியிருப்பதாக ரஜினிக்கு நெருக்கமான சிலர் கூறுகின்றனர்.
சுமார் 24 ஆண்டுகளுக்கு முன் ரஜினி தனது திருமணத்தை மதியம் 1.40 மணிக்கு அறிவித்ததைப் போலவே, நடிகர்தனுஷும் தனது திருமண அறிவிப்பை மதியம் 1.40 மணிக்கு வெளியிட்டிருக்கிறார் என்கிறார் பழம் பெரும்கோலிவுட் நிருபர் ஒருவர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications