தமிழகத்தில் வலுக்கும் கனமழை: 3 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை மேலும் தீவிரமடைந்துள்ளது. சென்னை உள்பட பல பகுதிகளில் கன மழைபெய்து வருகிறது.
பருவ மழையோடு, வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த மண்டலமும் உருவாகியிருப்பதால் சென்னைஉள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனத்த மற்றும் மிக கனத்த மழை பெய்யும் எனநுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூரில் வீடு இடிந்து 3 பேர் பலி:
திருச்செந்தூரில் கன மழையால் வீடு இடிந்ததில் 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். கும்பகோணத்தில் ஒரு வீடுஇடிந்ததில் 6 பேர் காயமடைந்தனர்.
கன்னியாகுமரி, உதகை, கடலூர், வேலூர், மதுரை, சென்னை உள்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாககன மழை பெய்து வருகிறது.
தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை:
தஞ்சையில் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று பிற்பகல் முதல் கன மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த மழையால் நகரின்முக்கியச் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் காலை முதல் தொடர் மழை பெய்துவருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications