என் முழு சம்மதம் உண்டு: ரஜினி
சென்னை:
தனுஷுக்கும், தனது மகள் ஐஸ்வர்யாவுக்கும் இடையிலான திருமண செய்தியை ரஜினிகாந்த் முறைப்படிஅறிவிக்காதது குறித்தும், இந்த செய்தி குறித்து ரஜினி தரப்பு பெருத்த அமைதி காப்பது குறித்தும் பலவிதசந்தேகங்கள், கேள்விகளை எழும்பிய நிலையில் ரஜினி தனது மெளனத்தைக் கலைத்துள்ளார்.
தென்னக திரையுலகின் முக்கியப் புள்ளியாகவும், தமிழகத்தின் மிக முக்கிய விஐபியாகவும் கருதப்படுகிறரஜினிகாந்த் வீட்டுத் திருமணத்தை அவரது குடும்பத்தினர் அறிவிக்காமல் வெகு சாதாரணமாக அந்த செய்திவெளியானது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ரஜினிக்கு இந்த திருமணத்தில் முழு சம்மதம் இல்லை என்றும் பேச்சு எழுந்தது. இந் நிலையில், தனுஷின் அண்ணன்செல்வராகவன் இயக்கியுள்ள 7ஜி ரெயின்போ காலனிப் படத்தை ரஜினிகாந்த் இன்று பார்த்தார்.
பின்னர் அவரிடம் செய்தியாளர்கள், தனுஷ், ஐஸ்வர்யா திருமணம் குறித்து கேள்விகளைக் கேட்டனர். அதற்குரஜினி கூறுகையில்,
இது எனது முழு சம்மதத்துடன் நடக்கும் திருமணம் தான். நான் சொல்லித்தான் தனுஷ், இந்தத் திருமண செய்தியைபத்திரிகையாளர்களிடத்தில் தெரிவித்தார். இதில் வேறு ஒன்றும் இல்லை என்ற ரஜினி மேற்கொண்டு எதுவும்பேசவில்லை.
தனுஷ், ஐஸ்வர்யா திருமணம் குறித்து முதலில் பேச்சை எடுத்தவர் தனுஷின் தாயார் விஜயலட்சுமிதான் என்றுகூறப்படுகிறது. இதை தனது கணவர் கஸ்தூரிராஜாவிடம் கூற அவரும் ஓ.கே. செய்துள்ளார்.
இதையடுத்து விஜயலட்சுமி, லதா ரஜினிகாந்த்தை சந்தித்து இதைக் கூறியுள்ளார். முதலில் ஆச்சரியமடைந்த லதா,பின்னர் யோசித்துக் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், தனுஷை விட ஐஸ்வர்யா 2 வயது மூத்தவராயிற்றே என்பதால் இந்தக் கல்யாணம் சரி வராது என்று ரஜினிமுதலில் தயங்கியதாகத் தெரிகிறது.
ஆனால் ஐஸ்வர்யா தனது முடிவில் பிடிவாதமாக இருக்கவே, ரஜினியும் தனது நிலையில் பிடிவாதமாகவே இருந்துபார்த்துவிட்டு, பின்னர் மகள் தனது முடிவில் தீவிரமாக இருக்கவே, அதற்கு ஏற்றார்போல அனுசரித்து இத்திருமணத்துக்கு ரஜினி ஒப்புதல் தந்தார் என்கிறது அவருக்கு நெருக்கான வட்டாரம்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications