தேவர் பூஜை: மதுரை, ராமநாதபுரத்தில் பலத்த பாதுகாப்பு
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத்த தேவரின் பிறந்த தினமான நாளை நடக்கவுள்ள குருபூஜையையொட்டி மதுரை,ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அவர் பிறந்த பசும்பொன் கிராமத்தில் மட்டும் 5,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த மற்றும் மறைந்த தினமான அக்டோபர் 30ம் தேதி (நாளை)குருபூஜையாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான குருபூஜை ஜெயந்தி விழாநேற்று தொடங்கியது.
பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் சிறப்புப் பூஜைகளுடன் குருபூஜைக்கான நிகழ்ச்சிகள் தொடங்கின.தேவர் குறித்த சிறப்புப் புகைப்படக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குருபூஜை தினமான நாளை ஆயிரக்கணக்கான முக்குலத்தோர் சமூக மக்களும், பிற சமுதாயத்தினரும் தேவர்நினைவிடத்திற்கு வருவார்கள் என்பதாலும், காலை முதல் அரசியல் தலைவர்களர் பலரும் வரவுள்ளதாலும்பசும்பொன் கிராமத்தைச் சுற்றிலும் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பசும்பொன் கிராமத்தில் மட்டும் 5,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிரபசும்பொன் கிராமத்திற்கு வரும் முக்கியச் சாலைகளின் எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தேவர்நினைவிடத்திற்கு வருவோர் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
குருபூஜையையொட்டி பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட தேவர் சமுதாயக் கட்சிகள் பூஜை நடத்துவதற்கு ஏற்கனவேநேரம் ஒதுக்கித் தரப்பட்டு விட்டது. மேலும், மதுரையில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த அமைப்புகள், கட்சிகள்ஊர்வலம் நடத்துவதற்கும் நேரம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது.
தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பது, ஊர்வலம் நடத்துவது ஆகியவற்றில் தங்களுக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று கோரி தேவர் சமூக அமைப்பினருக்குள்ளேயே மோதல் வெடிப்பது வழக்கம். இதைத்தவிர்க்கவே மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா குருபூஜையில் கலந்து கொள்வது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும்இல்லை. இருப்பினும் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் திடீரென்று தோழி சசிகலா சகிதம் அவர்பசும்பொன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications