அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப் பதிவு தீவிரம்
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது.
கடைசி நேரத்தில் நடத்தப்பட்ட நாடு தழுவிய கருத்துக் கணிப்புகளில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கும் அவரை எதிர்த்துப்போட்டியிடும் ஜான் கெர்ரிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவது மீண்டும் உறுதியாகியுள்ளது.
நாடு முழுவதும் 156 மில்லியன் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.
சி.என்.என். நடத்திய கடைசி நேர கருத்துக் கணிப்பின்படி ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கெர்ரியை விட குடியரசுக்கட்சியைச் சேர்ந்த புஷ்சுக்கு 2 சதவீத ஆதரவு அதிகம் உள்ளதாகவும், யாருக்கு வாக்களிப்பது என்று இன்னும் முடிவெடுக்காதவாக்காளர்கள் 3 சதவீதம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பாக்ஸ் நியூஸ் டிவி சேனல் நடத்திய கருத்துக் கணிப்பின்படி கெர்ரிக்கு புஷ்ஷைவிட 2 சதவீதம் அதிக ஆதரவுஉள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஓகியோ, புளோரிடா, பென்சில்வேனியா, மின்னசோடா, லோவா, விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் மிகக் கடுமையானபோட்டி நிலவுவதால், வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் இந்த 6 மாகாணங்களும் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது.
குறிப்பாக ஓகியோ, புளோரிடா, பென்சில்வேனியாவில் தான் போட்டி மிக மிகக் கடுமையாக உள்ளது.
கடந்த தேர்தலைவிட இந்த முறை ஏராளமான புதிய வாக்காளர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். வாக்குப் பதிவுஅதிகமாக இருந்தால் புஷ்சுக்கு எதிரான முடிவே ஏற்படும் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
இதற்கிடையே வாக்குப் பதிவில் மோசடி செய்ய புஷ் ஆதரவாளர்கள் முயல்வதாகவும், இதனால் நாடு முழுவதும் வாக்குப் பதிவுமையங்களைக் கண்காணிக்க ஆயிரக்கணக்கான வீடியோ கேமராமேன்களை களத்தில் இறக்கிவிட்டுள்ளார் ஆஸ்கர் விருதுவென்ற திரைப்படத் தயாரிப்பாளரான மூர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications