வீரப்பனுக்கு பணிந்ததில்லை: ஜெயலலிதா
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 1994-ம் ஆண்டு விதித்த எந்த நிபந்தனையையும் நானோ, எனது அரசோ ஏற்றுக்கொள்ளவில்லை என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
1994 டிசம்பர் 3ம் தேதியில் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் சிதம்பரநாதன், தலைமைக் காவலர் ராஜகோபால்,ஆசிரியர் சேகர் ராஜா ஆகியோர் வீரப்பனால் கடத்தப்பட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியரோடு பிணைக்கைதிகள் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த பேபி வீரப்பன் என்கிற தனது கூட்டாளியைவீரப்பன் அனுப்பி இருந்தான். பிணைக் கைதிகளை மீட்க பவானி ஆற்றைக் கடந்து யாராவது வந்தால், அவர்கள்கொல்லப்படுவார்கள் என்று வீரப்பன் எச்சரித்து இருந்தான்.
வீரப்பனின் நிபந்தனைகள் எதையும் நான் ஏற்கவில்லை. எனது உத்தரவின்பேரில் வால்டர் தேவாரம், சஞ்சய் அரோரா ஆகியகாவல்துறை அதிகாரிகள் தலைமையில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது அதே மாதம்29ம் தேதி தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலில் அதிரடிப்படை வீரர் துரைராஜுக்குக் கையிலும், நெஞ்சிலும் குண்டு காயம் ஏற்பட்டது. பிணைக் கைதிகளாகப்பிடித்து வைக்கப்பட்டிருந்த மூவரையும் சிறப்பு அதிரடிப் படை மீட்டது.
அதோடு, வீரப்பன் கூட்டத்தைச் சேர்ந்த ஐயன்துரை, ரங்கசாமி, கடம்பூரான் ஆகிய 3 பேரும் அதிரடிப்படையிடம் சரண்அடைந்தனர்.
பிணைக் கைதிகள் மூவரை உயிரோடு மீட்டதோடு, வீரப்பன் கூட்டாளிகளில் மூவரைச் சரணடையச் செய்த அதிரடிப்படையைப்பாராட்டி 1994 டிசம்பர் 30ம் தேதி அறிக்கை வெளியிட்டேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications