ஜெவுக்கு விழா: வருவோம்.. ஆனா, ஆட மாட்டோம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்த் திரையுலகம் சார்பில் வரும் 8ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள பாராட்டுவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், நடிகர் கமல்ஹாசனும் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.
அதே போல விஜய், சூர்யா, தனுஷ், அர்ஜூன், விக்ரம், மாதவன், ஜோதிகா, த்ரிஷா, மீனா போன்றோர் விழாவுக்குநிச்சயம் வருவோம், ஆனால் மேடையில் ஆடவோ, பாடவோ மாட்டோம் என்று மறுத்துள்ளனர்.
திரையுலகுக்கு பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்கியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்ததமிழ்த் திரையுலகம் முடிவு செய்தது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா என்பது குழப்பமாகவே இருந்து வந்தது. இந் நிலையில்இயக்குநர் பாலச்சந்தர் தலைமையிலான விழா ஒருங்கிணைப்புக் குழுவினர் ரஜினியை சந்தித்து கண்டிப்பாகவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இதைத் தட்ட முடியாத ரஜினியும் கண்டிப்பாக வருவதாகவும், விழாவில் பேசுவதாகவும் உறுதியளித்துள்ார்.
அதே போல கமல்ஹாசனும் இந்த விழாவில் நிச்சயம் கலந்து கொள்வதாகக் கூறியுள்ளார்.
இந் நிலையில், விழாவையொட்டி நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது என்று பல முன்னணிநடிகர், நடிகைகள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
விஜய், சூர்யா, தனுஷ், அர்ஜூன், விக்ரம், மாதவன், ஜோதிகா, த்ரிஷா, மீனா போன்றோர் விழாவுக்கு நிச்சயம்வருவோம், ஆனால் மேடையில் ஆடவோ, பாடவோ மாட்டோம் என்று கூறி விட்டனராம்.
இதனால் விழா அமைப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர்விஜயகாந்த்திடம் அவர்கள் கூறியபோது, இதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி விட்டாராம்.இதனால் அவர் மீதும் விழா அமைப்பாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.வி.சேகரின் நகைச்சுவை நாடகம் நடக்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவும், வித்யாசாகரும்,ஜெயலலிதாவை வாழ்த்தும் இரு பாடல்களுக்கு இலவசமாக இசையமைத்துள்ளனர்.
ரஜினியிலிருந்து பாய்ஸ் மணிகண்டன் வரை அனைவரும் பங்கேற்கவுள்ள நிலையில் திமுகவைச் சேர்ந்தநெப்போலியன், சரத்குமார் போன்றோர் கலந்து கொள்வார்களா என்பது குறித்து இதுவரை ஏதும் தகவல் இல்லை.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications