பொது அறிவில் புலி: சிறுமிக்கு கலாம் பாராட்டு
பரமக்குடி:
4 வயது சிறுமியின் நினைவாற்றல் மற்றும் பொது அறிவு திறமையைப் பாராட்டி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பாராட்டுக்கடிதம் எழுதியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் ஞானசுதா. இவரது மகள் நர்மதா தேவி. 4 வயதாகும் நர்மதா தேவி,பரமக்குடியில் உள்ள லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறார்.
சிறு வயதிலிருந்தே நல்ல நினைவாற்றல் கொண்டவராகத் திகழ்ந்த நர்மதா தேவி தற்போது பொது அறிவில் சூரப் புலியாகதிகழ்கிறார். பொது அறிவு தொடர்பான எந்தக் கேள்விக்கும் சட்டென பதில் அளிக்கிறார் நர்மதா.
தனது மகளின் திறமை குறித்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு ஞானசுதா கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து நர்மதாதேவியின் திறமையைப் பாராட்டி கலாம் பதில் அனுப்பியுள்ளார்.
அதில், அடுத்த முறை தமிழகம் வரும்போது நர்மதா தேவியை சந்திக்க முயற்சிப்பதாகவும், எதிர்காலத்தில் மிகச் சிறந்தகுடிமகளாக நர்மதா தேவி விளங்க ஆசிர்வதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா திரும்பிய கலாம்:
இந் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்டின் அதிபர் ஷேக் சயீத் பின் சுல்தானின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க அபுதாபிசென்றிருந்த கலாம் இன்று இந்தியா திரும்பினார். அவருடன் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அகமதுசென்றிருந்தார்.
ஷேக் சயீத்தின் மறைவுக்கு இந்திய அரசு மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications