மீண்டும் அதிபரானார் ஜார்ஜ் புஷ்: இந்தியா வாழ்த்து
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜ் புஷ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் தனதுவாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதோடு, இந்தியாவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
புஷ்ஷும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் கெர்ரியும் தலா 254, 252 வாக்குகள் பெற்ற நிலையில், ஓகியோ மாகாணத்தின்முடிவே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்ற நிலை ஏற்பட்டது.
இந் நிலையில் ஓகியோ மாகாணத்தின் வாக்கு எண்ணிக்கையிலும் புஷ் முன்னிலை வகித்தார். இதையடுத்து தபால் வாக்குகள்எண்ணப்படட்டும், அதன் பின்னரே வெற்றி, தோல்வி குறித்து இறுதி செய்ய முடியும் என கெர்ரி தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், ஓகியோவில் பதிவான மொத்த வாக்குகளில் 80 சதவீதத்தை பெற்றால் கூட கெர்ரியால் வெற்றி பெற முடியாது எனத்தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
ஜார்ஜ் புஷ்ஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தோல்வியை ஏற்பதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து அடுத்த ஜனாதிபதியாக புஷ்ஷே மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்கத் தேர்தலில் மிகக் கடுமையான போட்டிக்கு இடையே அதிபர் வெல்வது இது இரண்டாவது முறையாகும். கடந்த முறைஅல்கோருக்கும் புஷ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவி, இறுதியில் புளோரிடா மாகாணத்தின் வெற்றியை வைத்து அதிபர்பதவியைப் பிடித்தார் புஷ்.
இம் முறையும் இரு வேட்பாளர்களும் சரிக்குச் சமமான வெற்றியைப் பெற்று, இறுதியில் ஓகியோ மாகாண முடிவை வைத்து புஷ்வென்றுள்ளார்.
புஷ்ஷின் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தையில் ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகளின் விலைஉச்சத்தை எட்டின. அதே நேரத்தில் சர்வதேச பெட்ரோலிய எண்ணெயின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
புஷ்ஷை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.இந்தியாவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications