இலங்கை: நிதி தரும் நாடுகளுக்கு புலிகள் வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கைக்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு வரையறைகள் எதையும்விதிக்கக் கூடாது என்று விடுதலைப் புலிகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளின் புனரமைப்புக்கு ரூ.20,250 கோடி நிதியுதவி அளிக்கடோக்கியோவிலும் ஓஸ்லோவிலும் நடைபெற்ற சர்வதேசக் கூட்டங்களில், சில விதிமுறைகள் முன் வைக்கப்பட்டன.

நிதி உதவி வேண்டுமானால், அமைதிப் பேச்சில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றும் மேலும் அந்த நிதியைசெலவிடும் முறைகள் குறித்தும் சில நிபந்தனைகள் கூறப்பட்டன. ஆனால், அந்த நிபந்தனைகளை விடுதலைப் புலிகளின்ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் அப்போதே நிராகரித்துவிட்டார்.

இந் நிலையில் இப்போது இணையத் தளம் ஒன்றுக்கு பாலசிங்கம் அளித்துள்ள பேட்டியில், இனப் பிரச்சினைக்கான தீர்வைஇலங்கைக்கு நிதியுதவி செய்யும் நாடுகள் தீர்மானிக்க முடியாது. வெளிநாட்டு சக்திகளின் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல்பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியும்.

அமைதி முயற்சிகளில் வெளிநாட்டு சக்திகளின் தேவையற்ற தலையீடு என்பதால், டோக்கியோ பிரகடனத்தை நாங்கள்ஏற்கெனவே நிராகரித்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு ரூ.1071 கோடி சலுகைக் கடனை ஜப்பான் வழங்கியது. அமைதிப் பேச்சை மீண்டும் தொடங்கவலியுறுத்தி ஜப்பானின் சிறப்புத் தூதர் யாசுஷி அகாஷி இலங்கையில் கடந்த வாரம் பயணம் மேற்கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+