மாறன் தபால்தலை: பெரிதாக இருப்பதாக வழக்கு !!
சென்னை:
மற்ற தலைவர்களை விட, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் தபால் தலை பெரிதாகவெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக தொடரப்பட்டவழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வழக்கறிஞர் முத்துராஜ் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ரூ.5 விலையுள்ள முரசொலி மாறனின் தபால் தலை அளவில் பெரியதாக உள்ளது. மற்ற தலைவர்களின் தபால் தலையை விட இதுமிகப் பெரியதாக இருக்கிறது. பெரும்பாலான தபால் அலுவலகங்களில் இந்த தபால் தலை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற தலைவர்களின் தபால் தலைகள் வேண்டுமென்றே விற்பனை செய்யப்படுவதில்லை. முரசொலி மாறனின் மகனும், மத்தியஅமைச்சருமான தயாநிதி மாறனின் ((தபால்துறையும் இவரது கண்ட்ரோலில் தான் உள்ளது) வற்புறுத்தல் காரணமாகவே இப்படிநடக்கிறது.
எனவே தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை சொந்தக் காரணங்களுக்காக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். மேலும் அதிகாரதுஷ்பிரயோகம் செய்ததற்காக அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கோவிந்த்ராஜ் ஆகியோர், தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டில்ஆதாரம் எதுவுமில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications