விஜயக்குமார்-பாதயாத்திரை: விசாரணை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் பாதயாத்திரை செல்வதை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்கின்விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சந்தனக் கடத்தல் வீரப்பன் நவம்பர் 18ம் தேதி அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதைத்தொடர்ந்து பன்னாரி மாரியம்மன் கோவிலுக்குச் சென்று மொட்டை போட்டார் விஜயக்குமார். மேலும்,பன்னாரியிலிருந்து சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் வரை பாதயாத்திரை செல்லவும் விஜயக்குமார்திட்டமிட்டிருந்தார்.

ஆனால் விஜயக்குமார் யாத்திரை செல்வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அகில இந்திய ஐ.பி.எஸ். அதிகாரிகள்சங்கம் விஜயக்குமாரிடம் தனது அதிருப்தியைத் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இந் நிலையில், விஜயக்குமார் பாதயாத்திரை செல்லத் தடை விதிக்கக் கோரியும், அவர் மீது கொலை வழக்கு பதிவுசெய்யக் கோரியும் பொன்பழனி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், அரசு ஊழியராக இருப்பவர் இதுபோல பாத யாத்திரை செல்வது மதச்சார்பின்மை கொள்கைக்குஎதிரானதாகும். எனவே விஜயக்குமார் பாத யாத்திரை செல்லத் தடை விதிக்க வேண்டும்.

மேலும், வீரப்பன் கொல்லப்பட்ட இடத்திற்குட்பட்ட காவல் நிலையத்தில் விஜயக்குமார் உள்ளிட்டவர்கள் மீதுகொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கோவிந்தராஜன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்குவந்தது. அப்போது விஜயக்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விளக்கம் தர கால அவகாசம் கோரினார்.இதையடுத்து திங்கள்கிழமைக்கு நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

அதிரடிப்படைக்கு டிஜிபியானார் விஜயக்குமார்

இதற்கிடையே அதிரடிப்படை டி.ஜி.பியாக விஜயக்குமாருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது.

சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அதிரடிப்படை வீரர்கள் ஒரு படி பதவி உயர்வு வழங்கப்படும் என்றுதமிழக அரசு அறிவித்தது. ஏ.டி.ஜி.பியாக இருந்த விஜயக்குமாருக்கு டி.ஜி.பி பதவி தர முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்தார்.

ஆனால், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணி மூப்பின் அடிப்படையில் தான் பதவி உயர்வு அளிக்க முடியும். இந்த விதியைத் தளர்த்திவிஜய்குமாருக்கு பதவி உயர்வு வழங்க அனுமதி தருமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.

ஆனால், அதற்கு மத்திய அரசிடம் இருந்து சாதகமான பதில் வந்ததாகத் தெரியவில்லை. இந் நிலையில் விஜயக்குமாரைடி.ஜி.பியாக தமிழக அரசு பதவி உயர்த்தியுள்ளது. இருப்பினும் மத்திய அரசைப் பொருத்தமட்டில் அவர் ஏ.டி.ஜி.பியாகவேகருதப்படுவார் என்று தெரிகிறது.

அதேபோல் எஸ்.பிகளாக இருந்த செந்தாமரைக்கண்ணன் , சண்முகவேல் ஆகியோரும் அதிரடிப்படை டி.ஐ.ஜிக்களாக பதவிஉயர்வு பெற்றுள்ளனர்.

இந்த மூவருமே புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுவிட்டனர். இவர்களைத் தவிர அதிரடிப்படையில் எஸ்.பியாக இருந்துசமீபத்தில் ஓய்வு பெற்ற சின்னசாமிக்கு ஒரு ஆண்டு காலம் பதவி நீடிப்பும், டி.ஐ..யாக பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+