பெட்ரோல், கேஸ் விலை உயர்வுக்கு கருணாநிதி எதிர்ப்பு
சென்னை:
உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், சமையல் கேசின் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதிகோரியுள்ளார்.
விலை உயர்வுக்கு காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே பொறுப்பேற்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா காட்டமானஅறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் முரசொலியில் கருணாநிதி எழுதியிருப்பதாவது:
மத்திய அரசின் கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளும் இடதுசாரிகளும் இந்த விலை உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் என்று கோரியுள்ளன.
நடுத்தர மக்களையும், ஏழை விவசாயிகளையும் கடுமையாக பாதிக்கும் இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனேமறுபரிசீலனை செய்ய வேண்டும்.
3 வருடத்துக்கு முன்பு எல்லா சலுகைத் திட்டங்களையும் வாபஸ் வாங்கிவிட்டு இப்போது ஒவ்வொன்றாய் திருப்பித் தரும்ஜெயலலிதா அரசைப் போல இல்லாமல், விலை உயர்வை உடனே மத்திய திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்கருணாநிதி.
இந்த விலை உயர்வை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தில் குதிக்கப் போவதாக மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்கட்சிகளும் அறிவித்துள்ளன.
இந்த விலை உயர்வை எதிர்த்து இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் பந்த் நடத்தும் பா.ஜ.கவும் தேசம் தழுவிய போராட்டத்துக்குதயாராகி வருகிறது. இன்று டெல்லியில் விலை உயர்வை எதிர்த்து பா.ஜ.க. நடத்திய பேரணியின் மீது போலீசார் தண்ணீரைப்பீய்ச்சியடித்ததில் அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் உள்பட பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச அளவிலான கடும் விலை ஏற்றம் காரணமாக இந்த விலை உயர்வை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் என்று மத்திய அரசுஇருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள ரூ. 20,000 கோடி நஷ்டத்தை ஈடுகட்ட இந்த விலை உயர்வு தவிர்க்கமுடியாததாகிவிட்டதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications