ஜெவுக்கு பாராட்டு: சிந்து-ரீமா-எஸ்.ஜே.சூர்யா டான்ஸ்
![]() |
திருட்டு விசிடிக்கு எதிராக நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்ட வரும் 8ம் தேதி சென்னையில் நடத்தப்படும்திரையுலகினரின் நிகழ்ச்சியில் முன்னணி நடிகர், நடிகையர்கள் ஆட மறுத்துவிட்டதால், சிந்து துலானி, இயக்குனர் எஸ்.ஜே.ஆகியோர் ஆடுகின்றனர்.
நேரு விளையாட்டு அரங்கில் நடக்கும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், இதில் ஆடிப் பாட மாட்டோம் என இளம் முன்னணி நடிகர்கள் அனைவரும் மறுத்துவிட்டனர்.
திரையுலகினரின் இந்த நிகழ்ச்சியை ஜெயா டிவி ஒளிபரப்ப உள்ளதால், விரைவில் துபாயில் தாங்கள் நடத்தவுள்ளகலைநிகழ்ச்சிக்கு மவுசு குறைந்துவிடும் என்று நடிகர் சங்கத் தலைவர் விஜய்காந்த்தும் நினைக்கிறார். இதனால் நிகழ்ச்சியில்ஆடுமாறு நடிகர், நடிகையர்களை கட்டாயப்படுத்த மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
ஆனால், முதல்வருக்கான பாராட்டு நிகழ்ச்சியை கோலாகலமாகவும், மிக பிரமாண்டமாகவும் நடத்தும் முடிவில் இருக்கும்விஜய்காந்த், அதில் கலையுலகினரின் சார்பில் பெரும் தொகை ஒன்றையும் முதல்வரின் நல நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளார்.
இந் நிகழ்ச்சியில் இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் சிந்து துலானியும் இணைந்து 2 பாடல்களுக்கு ஆடுகின்றனர்.
அதே போல ரீமா சென்னும் பாய்ஸ் பட புகழ் நடிகர் பரத்தும் இணைந்து ஒரு பாடலுக்கு ஆடுகின்றனர். ராஜா படத்தில்சிவாஜியும்-ஜெயலலிதாவும் இணைந்து ஆடிய பாடல் அது.
சீ"ர்காழி சிவசிதம்பரம், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ, எஸ்.பி. சரண், திப்பு, கார்த்திக், சித்ரா, அனுராதா, மகதி, மாலதிஆகியோரின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
பார்த்திபனும் வடிவேலும் இணைந்து ஒரு ரவுசு நிகழ்ச்சியையும், அப்போது அதிமுகவில் உள்ள எஸ்.வி.சேகரின் ட்ரூப் ஒருநாடகத்தையும் நடத்துகிறது.
குன்னக்குடி வைத்தியநாதனின் வயலின் கச்சேரியும் நடக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் முதல்வரை வாழ்த்தி ஒருபாடலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலும் நிகழ்ச்சியில் பாடப்படவுள்ளது.
-
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?













Click it and Unblock the Notifications