தமிழகத்தில் கன மழை தொடர்கிறது: ரயில்கள் தாமதம்
சென்னை:
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகம் மற்றும் ஆந்திராவில் தொடர்ந்து கன மழை பெய்துவருகிறது. இதனால் பல ரயில்கள் தாமதமாக வந்து கொண்டுள்ளன.
இந்த மழை மேலும் 2 நாட்கள் நீடிக்கும் என்று நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாககடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னையில் கனத்த மழை பெய்யக் கூடும்.
இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பரங்கிப்பேட்டையில் அதிகபட்சமாக 15 செ.மீ. மழைபெய்துள்ளது. சென்னையில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல வீடுகளில் நீர் புகுந்துள்ளது.
ரயில்கள் தாமதம்:
ஆந்திராவில் கன மழை காரணமாக பல இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வட மாநிலங்களில்இருந்து தமிழகத்துக்கு வரும் பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு மிகத் தாமதமாக வந்து கொண்டுள்ளன.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், கிரான்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், லக்ளென எக்ஸ்பிரஸ், சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக வந்துகொண்டுள்ளன.
இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து வட மாநிலங்களுக்குக் கிளம்பிச் செல்லும் ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.இன்று மாலை 4..30க்குக் கிளம்ப வேண்டிய ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8.30க்கும், மாலை 5.30க்குப் புறப்படும் வாரணாசிஎக்ஸ்பிரஸ் இரவு 10.30க்கும் மாற்றப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வேயின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications