புதிய ஏவுகணை தனுஷ்: இந்தியா ஏவி சோதனை
பாலாசூர்:
இந்தியாவின் புதிய ஏவுகணையான தனுஷ் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்ட சோதனையிடப்பட்டது.
தரையில் இருந்து பாய்ந்து தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கும் பிருத்வி ஏவுகணையை மாற்றியமைத்து, கப்பல்களில் இருந்துசெலுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ஏவுகணை தான் தனுஷ்.
8.56 மீட்டர் நீளமும் கொண்ட இந்த ஏவுகணை 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டுடன், 250 கி.மீ. தூரம் பாய்ந்து சென்றுதாக்கவல்லது. கப்பலில் இருந்து கப்பல்களையும், கப்பலில் இருந்து தரையில் உள்ள இலக்கையும் இதனால் தாக்க முடியும்.
ஒரிஸ்ஸா மாநிலம் சண்டிபூர் அருகே வங்கக் கடலில் ஐ.என்.எஸ். சுபத்ரா என்ற கடற்படைப் போர்க் கப்பலில் இருந்து இன்றுபகல் 12.20க்கு இந்த ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
4,600 கிலோ எடை கொண்ட இந்த ஏவுகணையால் அணுகுண்டையும் ஏந்திச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. திரவஎரிபொருளால் இயங்கும் இந்த ஏவுகணையை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தும் செலுத்தி இந்தியா வெற்றிகரமாகசோதனையிட்டுவிட்டது.


Click it and Unblock the Notifications
