திமுகவால் வளர்ந்த அப்பு!
சென்னை:
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலையை சென்னையைச் சேர்ந்த அப்பு என்பவனின்தலைமையிலான கூலிப் படைதான் செய்துள்ளது என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கூலிப்படையினரை போலீஸார் வளைத்துப் பிடித்துள்ளனர். அப்பு மட்டும் தப்பி விட்டான்.
அப்பு குறித்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. அப்பு ஆரம்ப காலத்தில்சாதாரண ரெளடியாக இருந்தவன் என்றும் திமுகவினர்தான் அவனை கூலிப் படைத் தலைவனாக வளர்த்து விட்டனர் என்றும்தெரிய வந்துள்ளது.
சென்னை அண்ணா நகர் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவன் அப்பு. ஆரம்பத்தில் சந்தனக் கட்டைகளைக் கடத்தும் தொழிலில்இறங்கினான். பின்னர் ரெளடியாக மாறினான். தனக்கென சிறு கும்பலை சேர்த்துக் கொண்டு கட்டைப் பஞ்சாயத்துக்களில்இறங்கினான்.
இந் நிலையில் பல்வேறு கட்சியினரின் தொடர்புகள் அவனுக்குக் கிடைத்தன. அவற்றில் திமுகவின் ஆதரவுதான் பலமாகஇருந்தது. திமுகவைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் அப்புவுக்கு பெரும் ஆதரவாக இருந்து வந்துள்ளனர்.
அப்புவை நம்பி ஒரு வேலையைக் கொடுத்தால் கச்சிதமாக முடிப்பான் என்ற நம்பிக்கை அவனை நம்பியவர்களுக்கு இருந்தது.வேலை கொடுக்கப்பட்டதும் அதை தனது நெருங்கிய கூட்டாளிகளிடம் கொடுத்து முடிக்கச் செய்வான் அப்பு. பின்னர்வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விடுவது அவனது வழக்கமாம்.
இந்த முறையில்தான் சங்கரராமன் கொலைக்குப் பின்னர் அவன் தலைமறைவாகி விட்டான். அப்புவின் மகன் அமெரிக்காவில்படித்துக் கொண்டு, அங்கே வேலை பார்த்து வருகிறார். எனவே அப்பு அமெரிக்காவுக்குப் பறந்து விட்டதாக போலீசுக்கு தகவல்வந்தது.
தற்போது அப்புவின் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்திருக்கும் போலீஸார், மத்திய அரசின் உதவியுடன் அப்புவைப் பிடிக்கவும்நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே அப்பு பெங்களூரில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து தனிப்படை போலீஸார் பெங்களூர்விரைந்துள்ளனர்.
பிடிக்காமல் விட மாட்டோம்: கமிஷனர்
இதற்கிடையே, அப்பு இப்போது சென்னையில் இல்லை. ஆனால் நகருக்குள் காலடி எடுத்து வைத்தால் அடுத்த நிமிடமே அவனைபோலீஸார் பிடித்து விடும் அளவுக்கு உஷார் நிலையில் காவல்துறை உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர்நடராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து நடராஜ் கூறுகையில், வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமனைக் கொலை செய்த கூலிப் படைத்தலைவன் அப்பு சென்னையில் இல்லை. அவன் தப்பியோடி விட்டான். அவனைப் பிடிக்கும் முயற்சியில் சென்னை போலீஸார்தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னைக்குள் அப்பு திரும்பி வந்தால், அவன் காலடி எடுத்து வைத்த அடுத்த நிமிடமே அவனை வளைத்துப் பிடிக்கும்அளவுக்கு சென்னை காவல்துறை உஷாராக வைக்கப்பட்டுள்ளது என்றார்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications