உச்ச நீதிமன்றத்தை நாட போவதில்லை: ஜெயேந்திரர்
வேலூர்:
ஜாமீனுக்காக உச்ச நீதிமன்றத்தை நாடப் போவதில்லை என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறி உள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை தொடர்பாக ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு வேலூர்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை சந்திக்க காஞ்சி சங்கரமட வழக்கறிஞர்கள் தியாகராஜன், சண்முகம், செல்லப்பா ஆகியோர் வேலூர் சிறைக்கு வந்தனர்.ஜெயேந்திரரை சந்தித்த பின்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அவர்கள் கூறியதாவது:
ஜெயேந்திரர் உடல் நலத்துடன் இருக்கிறார். அதே நேரத்தில் களைப்பாக உள்ளார். சிறையில் வழங்கப்படும் உணவுகளைத்தான்அவர் சாப்பிடுகிறார்.
ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதிக்கான மருந்து மாத்திரைகள் அவருக்கு வழங்கப்படுகின்றன. உயர் நீதிமன்றத்தில் நடைபெறும்வழக்குகள் குறித்து அவரிடம் தெரிவித்தோம். பின்னர் ஜெயேந்திரர் எங்களிடம்,
என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை சட்டப்படி சந்திக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நமதுமக்களிடம் யாரும் வருத்தப்பட வேண்டாம் என்றும் என்னைப் பார்ப்பதற்காக வேலூர் வந்து சிரமப்பட வேண்டாம் என்றும்கூறுங்கள். அவர்கள் அவரவர்களுடைய குடும்ப வேலைகளை செய்து கொண்டு வீட்டிலேயே வழிபாடு செய்தால் போதும் என்றுகூறினார்.
ஜெயேந்திரர் தரையில் தான் படுத்து உறங்குகிறார். அவருக்கு 2 போர்வைகள் வழங்கப்பட்டு உள்ளது. சிறையில் வழங்கப்பட்டுஉள்ள பொருட்கள் மூலம் பூஜை செய்கிறார்.
ஜெயேந்திரரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போவதாக கூறப்படுவது ஜெயேந்திரருக்குத் தெரியாது. நாங்களும் எதுவும்கூறவில்லை என்று வழக்கறிஞர்கள் கூறினார்கள்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications