பார்த்திபன் விலகலுக்கு விஜயகாந்த் காரணம்?
சென்னை:
விஜயகாந்த்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே பார்த்திபன் தனது நடிகர் சங்கப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளதாகக்கூறப்படுகிறது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அதன் தலைவர் விஜயகாந்த்தின் போக்கு குறித்து திரையுலகினரிடையே கடும் அதிருப்தி வலுத்துவருகிறது. முதலில் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பை உதறினார் சரத்குமார்.
விஜயகாந்த் தன்னிச்சையாக செயல்படுகிறார், தன்னை முன்னிருத்தியே அனைத்து வேலைகளையும் செய்கிறார் என்று சரத்குமார்பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதையடுத்து சரத்குமாரை சமாதானப்படுத்தி அவரது ராஜினாமாவை வாபஸ் பெற வைத்தனர்.
இந் நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவர் கே.ராஜனுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே மோதல்ஏற்பட்டது. ஜெயலலிதாவுக்குப் பாராட்டு விழா நடத்துவதற்கான கலை நிகழ்ச்சிக்கு நிதி வசூல் செய்வது தொடர்பாககே.ராஜனுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே மோதல் வெடித்தது.
தன்னை விஜயகாந்த் கெட்ட வார்த்தைகளால் கடுமையாகத் திட்டியதாக கே.ராஜன் புகார் எழுப்பினார். மேலும், மூத்தஇயக்குநரான கே.பாலச்சந்தர் முன்னிலையில் விஜயகாந்த் மிகவும் அசிங்கமாக நடந்து கொண்டதாகவும், இதை சும்மா விடப்போவதில்லை, நடிகர் சங்கம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் எனறும் கே.ராஜன் அறிவித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் நடிகர் பார்த்திபனும் விஜயகாந்த் மீது அதிருப்தியடைந்து தனது சங்க செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்துவெளியேறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவின்போது தான் அவமதிக்கப்பட்டதாக பார்த்திபன்கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகுக்கு ஜெயலலிதா சலுகைகள் அறிவிப்பதற்கு பார்த்திபன் முக்கிய மூல காரணமாக இருந்துள்ளார். அவர்தான்திருட்டு விசிடியை ஒழிப்பதற்காக தன்னந்தனியாக உண்ணாவிரதம் இருந்தார். இதற்கு விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத்தைச் சேர்ந்த நீங்கள் தனியாக உண்ணாவிரதம் இருப்பது தவறு என்று பார்த்திபனிடம் விஜயகாந்த் கூறியுள்ளார்.அதற்கு பார்த்திபன், இது நான் தனிப்பட்ட முறையில் நடத்தும் போராட்டம், இதற்கும் நடிகர் சங்கத்திற்கும் சம்பந்தமில்லைஎன்று விஜயகாந்த்திடம் தெரிவித்துள்ளார்.
இந்த பூசல் அத்தோடு நின்றுள்ளது. பார்த்திபன் போராட்டம் பின்னர் தொடர் போராட்டமாகி தீவிரமடைந்தது. அது முதல்வர்ஜெயலலிதாவிடம் ஊர்வலமாக சென்று மனு கொடுப்பதில் முடிவடைந்தது. பின்னர் ஜெயலலிதா திருட்டு விசிடியை ஒழிக்ககடுமையான நடவடிக்கைகளை அறிவித்தார்.
ஜெயலலிதாவைப் பார்க்கச் செல்லும் குழுவில் முதலில் பார்த்திபன் சேர்க்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்திபன்பாலச்சந்தரிடம் பேசியுள்ளார். இதையடுத்து அவரையும் குழுவில் இடம் பெறச் செய்துள்ளார் பாலச்சந்தர்.
அதேபோல, ஜெயலலிதாவுக்கு நடந்த பாராட்டு விழாவிலும் பார்த்திபன் கண்டு கொள்ளப்படவில்லை. நிகழ்ச்சியில் யார் யார்பேச வேண்டும், என்ன நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பதை முடிவு செய்தது விஜயகாந்த்தாம். இதனால் தனக்குப் பிடிக்காதபார்த்திபன், வடிவேலு ஆகியோரை அவர் கழற்றி விட்டுள்ளார்.
இந்த முறையும் பாலச்சந்தரை அணுகியுள்ளார் பார்த்திபன். இதைத் தொடர்ந்து அவரையும், வடிவேலுவையும் வைத்து ஒருநகைச்சுவை நிகழ்ச்சியை செய்யச் சொல்லியுள்ளார் பாலச்சந்தர்.
அதேபோல, வாழ்த்திப் பேசுவோர் பட்டியலிலும் பார்த்திபன் பெயர் மிஸ்ஸிங். இந்த முறை கடும் அதிருப்தியடைந்தார்பார்த்திபன். இதுகுறித்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நாசரிடமும், விஜயகாந்த்திடமும் நேரடியாகவே கேட்டுள்ளார்.
இதையடுத்து கடைசி நிமிடத்தில் பார்த்திபன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அவரும் வித்தியாசமாக பேசி முதல்வரின்கைத்தட்டலைப் பெற்றார்.
தொடர்ந்து விஜயகாந்த்தால் தான் அவமதிக்கப்பட்டதை பொறுக்க முடியாமல்தான் பார்த்திபன் தனது நடிகர் சங்கப் பொறுப்பைஉதறியுள்ளதாகத் தெரிகிறது.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
காசிமேடு கடலில் சட்டென பார்த்தால்.. தண்ணீருக்குள் இருந்து வெளியே வந்த உருவம்.. ஸ்டன் ஆன சென்னை -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications