For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிபிஐ விவகாரம்: மடத்தில் கோஷ்டி பூசல் வெடித்தது

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

Kanchi Muttசங்கரராமன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையைக் கோருவதில் காஞ்சி மடத்தின் இரு கோஷ்டிகளுக்கு இடையே மோதல்ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த விஷயத்தில் தனது தம்பி ரகுவின் பெயர் அடிபட்டாலும், சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரினார் இளையவரானவிஜயேந்திரர். ஆனால், சங்கராச்சாரியாரின் ஆதரவாளர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சங்கராச்சாரியாருக்கு எதிரான ஆதாரங்கள் மிக வலுவானதாக இருப்பதாகக் கருதும் அவரது ஆதரவாளர்கள் சிபிஐ,விசாரணையால் சிக்கலே அதிகரிக்கும் என்று கருதுகின்றனர். எப்படியாவது அவரை ஜாமீனில் வெளியே எடுத்துவிட்டு பின்னர்விவகாரத்தை மதரீதியில் அணுகுவதே பாதுகாப்பானது என்று கருதுகின்றனர்.

இதனால் தான் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று இளையவரர் கோரிக்கை விடுத்த செய்தியை டிவியில் பார்த்து டென்சனானசங்கராச்சாரியாரின் ஆதரவாளரான சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர், இது பொய்யான செய்தி. சிபிஐ விசாரணையைநாங்கள் கேட்கவே இல்லை. இத நல்லா கொட்டை எழுத்துல போடுங்கோ என்றார் பத்திரிக்கையாளர்களிடம்.

ஆனால், இளையவரோ தனக்கு ஏதும் தொல்லை நேராமல் இருந்தால் சரி என்று நினைப்பதாகத் தெரிகிறது. மேலும் மடத்தைத்தலைமையேற்று நடத்தவும் அவர் ஆர்வத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மெகபூப் நகரில் தன்னைக் கைது செய்ய வந்த எஸ்.பி. பிரேம் குமாருடன், சங்கராச்சாரியார் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தபோது உடனிருந்த இளையவர் ஆழ்ந்த அமைதி காத்துள்ளார்.

மேலும் சங்கராச்சாரியாரைக் கைது செய்கிறோம் என்ற தகவலை பிரேம் குமார் கூறியபோது, எனக்கொன்னும் ஆகிடாதே என்றுதான் கேட்டார் இளையவர் என்கிறார்கள்.

மடத்தில் தனது தம்பி ரகுவை நுழையவிட்டு மடத்தின் மாண்பைக் கெடுத்ததில் இளையவருக்கே அதிக பங்கு உள்ளது எனசங்கராச்சாரியாரின் தீவிர ஆதரவாளர்கள் கருதுகின்றனர். மது, மாது விஷயத்திலும் வீக் ஆசாமியான ரகுவால் தான் மடத்தில்தீமையே புகுந்தது என்கின்றனர்.

உள்ளே நுழைந்த ரகு, விஜயேந்திரரை விட சங்கராச்சாரியாருக்கு அதிக நெருக்கமாகிவிட்டார். இதனால், அவரது ஆளுமைஅங்கே கொடி கட்டிப் பறந்தது. இந்த விஷயங்களை இளையவரே விரும்பவில்லை என்கின்றனர்.

இப்போது இளையவருக்கு ஆதரவாக ஒரு பிரிவினர் களத்தில் குதித்துவிட்டனர். மடத்தின் தலைமையை அவரிடம்ஒப்படைக்கலாம் என்பது அவர்களது கருத்தாக உள்ளது. இந்தக் கோரிக்கையை ஏற்றே அவர் மெகபூப் நகரில் இருந்துகாஞ்சிக்கு விரைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந் நிலையில் என்.டி.டி.விக்கு பேட்டியளித்த இந்து பத்திரிக்கை ஆசிரியர் ராம், மடத்தின் பொறுப்பை இளையவர் ஏற்கவேண்டும், அங்கு அதிகாரம் செலுத்தும் சொந்த பந்தங்களை எல்லாம் ஒழித்துக் கட்டிவிட்டு, மடத்தின் பழைய மரபைக் காக்கநடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கிடேையே ஜெயேந்திரர் கைது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு விஜயேந்திரர் கோயதாக செய்திகள் வெளியானதை சங்கரமட மேலாளர் சுந்தரேச அய்யர் மறுத்துள்ளார்.

அப்பு தொடர்பானன ஆதாரம் சிக்கியது:

இதற்கிடையே, கூலிப் படைத் தலைவன் அப்புவுக்கும், சங்கர மடத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்புக்கான வலுவானஆதாரங்கள் சிக்கியுள்ளன.

சங்கர மடத்தில் நேற்று நடந்த அதிரடி போலீஸ் சோதனையையடுத்து, மடத்தின் புகைப்படக்காரர் மணி என்பவரது வீட்டிலும்சோதனை நடத்தப்பட்டது.

மணியின் வீட்டில் கிடைத்த சில புகைப்படங்களில் அப்புவும், சங்கர மட நிர்வாகிகளும் சேர்ந்து இருக்கும் படங்கள்கிடைத்துள்ளன. மிகப் பெரிய தாதாவான அப்பு மட நிர்வாகிகளுடன் சிரித்தபடி உலாவரும் பல படங்களும் கிடைத்துள்ளன.

இதற்கிடையே, சங்கர மட நிர்வாகிகளான சுந்தரசே அய்யர் உள்ளிட்ட 9 பேர் தாங்களாகவே மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில்ஆஜராயினர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இன்றும் விசாரணை தொடரும் எனத் தெரிகிறது.

முன்னதாக இவர்களை விசாரிக்க போலீசார் சென்றபோது ஒத்துழைக்க மறுத்தனர். இதனால் போலீசார் கடுமையாகஎச்சரித்துவிட்டு திரும்பி வந்தனர். இதையடுத்து அவர்களாகவே எஸ்.பி. அலுவலகத்துக்கு வரிசையாக வந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X