வன்னி அரசு, ஷாஜகானுக்கு வாழ்த்துகள்.. திமுகவினர் யாரையும் புண்படுத்த கூடாது.. ஸ்டாலின் அட்வைஸ்!
சென்னை: தமிழக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் இணைந்துள்ள நிலையில், திமுகவினர் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு என்று கூறிய ஸ்டாலின், அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள வன்னி அரசு மற்றும் ஷாஜஹான் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய இரு கட்சிகளும் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன. இதன்பின் தவெக ஆட்சி அமைக்க இந்த இரு கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளித்த நிலையில், தற்போது இரு கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளன. விசிக சார்பாக வன்னி அரசு மற்றும் ஐயூஎம்எல் சார்பாக ஷாஜஹான் அமைச்சராகி இருக்கின்றனர்.

வன்னி அரசுக்கு சமூக நலத்துறையும், ஷாஜஹானுக்கு சிறுபான்மை நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இரு கட்சிகளும் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால் திமுகவினர் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் மீது கடுமையாக விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். திமுக எம்பி ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான சொற்களை பயன்படுத்தி விமர்சித்தார்.
அதில், என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் "முடத்தெங்கு"! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? என்று பதிவிட்டுள்ளார். இதனால் விசிக மற்றும் திமுக இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் திமுகவினருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
அதில் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னி அரசு, ஷாஜஹான் இருவருக்கும் எனது வாழ்த்துகள்! தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்று பதிவிட்டுள்ளார். ஸ்டாலினின் பதிவு திமுகவினர் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications