ஜூனியர் சூர்யா ரெடியா? தேவ்-தியாவின் லேட்டஸ்ட் வீடியோ! ஜோதிகா கொடுத்த ரியாக்ஷன், தள்ளி நின்ற "கருப்பு”

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூர்யா தற்போது கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியால் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார். பல ஆண்டுகளாக ஒரு மிகப்பெரிய கமர்ஷியல் தியேட்டர் வெற்றிக்காக காத்திருந்த சூர்யாவுக்கு இந்த படம் சரியான கம்பேக் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த மகிழ்ச்சி ரசிகர்களிடம் மட்டும் இல்லாமல், சூர்யா வீட்டுக்குள்ளும் முழு கொண்டாட்டமாக மாறியிருப்பதாக நடிகை ஜோதிகா கூறியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Suriya Jyothika Dev Diya Karuppu Tamil Cinema

கருப்பு படம் வெற்றி

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான கருப்பு திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சூர்யாவின் மாஸ் தோற்றம், கதையின் தாக்கம், கிளைமாக்ஸில் ரசிகர்களை கவர்ந்த நடிப்பு, சாய் அபயங்கரின் பின்னணி இசை என பல அம்சங்கள் படத்தை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றிருக்கின்றன. பாக்ஸ் ஆபீஸிலும் படம் தொடர்ந்து வேட்டை நடத்தி வருகிறது. முதல் வார முடிவில் உலகளவில் 200 கோடி ரூபாயை தாண்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜோதிகா பேச்சு

இந்த வெற்றியை பற்றி சமீபத்திய பேட்டியில் பேசிய ஜோதிகா, நடிகர்களுக்கு நல்ல கதைகள் மட்டுமல்ல, பாக்ஸ் ஆபீஸ் வெற்றியும் முக்கியம் என்று கூறியுள்ளார். "யாரும் தங்கள் படம் நஷ்டமடைய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். கருப்புக்கு கிடைத்திருக்கும் அன்பை பார்த்து எங்கள் வீட்டிலேயே கொண்டாட்டமாக இருக்கிறது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதைவிட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது சூர்யாவின் குடும்பத்தின் லேட்டஸ்ட் தோற்றம் தான். ஜோதிகா நடித்துள்ள புதிய ஓடிடி படமான சிஸ்டம் வெளியீட்டு நிகழ்ச்சியில் சூர்யா, ஜோதிகா மற்றும் அவர்களது குழந்தைகள் தேவ், தியா ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யா குடும்பம் முழுவதும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸாக மாறியுள்ளது.

Suriya Jyothika Dev Diya Karuppu Tamil Cinema

ஜோதிகாவின் ரியாக்ஷன்

அதிலும் செய்தியாளர்கள் முன்பு சூர்யா தன்னுடைய குடும்பத்துடன் புகைப்படம் எடுக்கும் போது தன்னுடைய குழந்தைகள் மற்றும் ஜோதிகாவை முன்னிலைப்படுத்தி அவர்களை தனியாக புகைப்படம் எடுக்க சொல்லிவிட்டு தள்ளி நின்று கொண்டிருக்கிறார். அப்போது ஜோதிகா பக்கத்துல வாங்க என்பது போல ரியாக்ஷன் கொடுக்க, உடனே சூர்யாவும் அவர்களுடன் சேர்ந்து போட்டோஸ் எடுத்து இருக்கிறார். இதை பார்க்கும் பலரும் ஜோதிகாவின் கண் அசைவு சூர்யாவை ஆட்டி படைக்கிறது என்று கலாய்த்து வருகின்றனர்.

குறிப்பாக தேவ் மற்றும் தியாவை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் மழை பொழிந்து வருகின்றனர். "தேவ் அப்படியே சூர்யா மாதிரி இருக்காரே", "தியா ஜோதிகாவின் சிறுவயது தோற்றம் போல இருக்காங்க", "ஜூனியர் சூர்யா ஹீரோவாக வந்தா செம ஹிட்" என்று ரசிகர்கள் உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர்.

சிவகுமார் பேச்சு

சமீபத்தில் நடிகர் சிவகுமார் கூட, "சூர்யாவும் கார்த்தியும் நடிகர்களாக வர வேண்டும் என்று நாங்கள் திட்டமிடவில்லை; அது இயல்பாக நடந்தது. அடுத்த தலைமுறை வருவது கடவுளின் விருப்பம்" என்று கூறியிருந்தார். அதனால் தேவ் சினிமாவுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பும் மீண்டும் எழுந்துள்ளது.

ஒருபுறம் கருப்பு வெற்றி கொண்டாட்டம்... மறுபுறம் சூர்யா குடும்பத்தின் அரிய லேட்டஸ்ட் கிளிக்... தற்போது ரசிகர்களின் பேச்சு முழுக்க இதைத்தான் சுற்றி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+