கொலைக்கு ரூ. 30 லட்சம் தந்த காண்ட்ராக்டர்கள் சிக்கினர்
சென்னை:
சங்கராச்சாரியாரின் உத்தரவுப்படி சங்கரராமன் கொலையாளிகளுக்கு ரூ. 30 லட்சம் தந்த சென்னையைச் சேர்ந்த இருகாண்ட்ராக்டர்களின் விவரம் தெரியவந்துள்ளது.
கொலைக்கு மொத்தம் ரூ. 40 லட்சம் கூலி பேசப்பட்டதாகவும், இதில் ரூ. 10 லட்சத்தை சங்கர மடம் வழங்கியதாகவும் மிச்சத்தைஇரு தொழிலதிபர்கள் தந்ததாகவும் கொலையாளிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வாக்குமூலத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் சென்னையைச் சேர்ந்த இரண்டு கட்டட காண்ட்ராக்டர்கள்சிக்கியுள்ளனர். இவர்களது பெயர் அண்ணா மற்றும் சுப்பிரமணியம். இந்த இருவரும் தலா ரூ. 15 லட்சத்தைகொலையாளிகளுக்குத் தந்துள்ளனர்.
விரைவில் இந்த இருவரையும் போலீசார் கைது செய்யலாம் என்று தெரிகிறது. இவர்கள் வங்கியில் இருந்து எடுத்த பணக்கட்டுக்களும் கொலையாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணமும் ஒன்று என்பதும் ஆதாரப்பூர்வமாகநிரூபிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications