வீரப்பனை பிடிக்க உதவிய ப்ரியா தற்கொலை முயற்சி !!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Priyaவீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் அதிரடிப்படையினருக்கு ப்ரியா பெரும் உதவி செய்தார். வீரப்பனின் மனைவிமுத்துலட்சுமியுடன் நெருங்கி பழகி, வீரப்பனைப் பற்றிய பல தகவல்களை ரகசியமாகப் பெற்று அதிரடிப்படைக்கு ப்ரியாதெரிவித்தார்.

வீரப்பன் கொல்லப்பட்ட பின் ப்ரியா குறித்து முத்துலட்சுமி சொல்லித்தான் இப்படிப்பட்ட பெண் உளவாளி இருப்பதேவெளியுலகுக்குத் தெரிந்தது.

வீரப்பன் கொலைக்குப் பின் ப்ரியா தனது தாய் கனகவல்லியுடன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிகுடியிருப்பில் வசித்து வந்தார்.

தரமணியில் உள்ள ஒரு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து தொழில் படிப்பு படித்தார். இந் நிலையில் ப்ரியாவுக்கும்கனகவல்லிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதில் மனமுடைந்த ப்ரியா எலி மருந்தை குடித்தாகவும்தெரிகிறது.

இதையடுத்து ப்ரியாவை தாயார் கனகவல்லியும் பக்கத்து வீட்டுக்காரர்களும் அடையாறில் உள்ள ஒரு தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின் அவரது உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ப்ரியாவிடம் வாக்குமூலம் பெற்றனர்.அவர்களிடம் குடும்பத் தகராறு காரணமாகவும், காதல் கணவர் (2வது கணவர்) தனது நடத்தையில் சந்தேகப்பட்டதாலும்தற்கொலை செய்ய முயற்சித்ததாக ப்ரியா தெரிவித்தாராம்.

Priya with mother Kanagavalliப்ரியாவின் தாயார் கனகவல்லி, இது தொடர்பாக நாங்கள் புகார் ஏதும் கொடுக்க விரும்பவில்லை என்றும் இது எங்கள் குடும்பவிவகாரம் என்றும் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

காதலனுடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டு அவரால் கைவிடப்பட்ட ப்ரியா பின்னர் இன்னொருவரை ஏமாற்றித்திருமணம் செய்தவராவார். இந்த மோசடித் திருமணம் தொடர்பான வழக்குக்காகவே முதன்முதலில் போலீசாரிடம் சென்றார்ப்ரியா. இதே போல எஸ்டேட்கள் வாங்கி விற்பதில் சில முறைகேடுகள் செய்த புகார்களும் இவர் மீது உள்ளன.

இந்த சிக்கல்களில் இருந்து காப்பாறுவதாக உறுதியளித்துத் தான் ப்ரியாவை உளவாளியாக மாற்றி முத்துலட்சுமியுடன்பழகவிட்டது போலீஸ். வீரப்பன் தலைக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 5 கோடி பரிசு ப்ரியாவுக்குத் தரப்படலாம் என்று கூறப்பட்டுவந்தது.

இந் நிலையில் தான் ப்ரியா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

வீரப்பனை வீழ்த்த உதவிய இளம் பெண் சண்முகப்ரியா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+