For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பனை வீழ்த்த உதவிய இளம் பெண் சண்முகப்ரியா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியிடம் நெருங்கிப் பழகி வீரப்பனை வீழ்த்த சில வழிகளில் உதவிய கோவை பெண் பிரியாதனது சாகஸங்கள் குறித்து வாய் திறக்க ஆரம்பித்திருக்கிறார்.

Muthulakshmi and Shanmugapriya

படம்: நன்றி நக்கீரன்
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதும், முத்துலட்சுமி பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், கோவையைச் சேர்ந்த ப்ரியாஎன்ற பெண் மூலமாக போலீஸார் என்னிடம் வீரப்பன் குறித்த தகவல்களைப் பெற்றனர் என்று கூறியிருந்தார்.

யார் இந்த ப்ரியா என்ற தகவலை அதிரடிப்படை வெளியிடாத நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிகுடியிருப்பில் தனது தாயாருடன் ப்ரியா தங்கி இருக்கும் தகவல் வெளியானது.

இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்பை முற்றுகையிட்டனர். அப்போது ப்ரியா அளித்த பேட்டியில்கூறியதாவது:

எஸ்.பிக்கள் செந்தாமரைக்கண்ணன், அசோக்குமார் ஆகியோர் எனது குடும்ப நண்பர்கள். அடிக்கடி எங்கள் வீட்டுக்குவருவார்கள். ஒரு முறை என்னிடம் முத்துலட்சுமியுடன் ஒரு பெண் பழகினால் வீரபபனைப் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என்றும் அதற்கு உதவுமாறும் என்னிடம் கேட்டனர்.

முதலில் நான் தயங்கினேன். பின்பு ஆபத்து ஏதும் வராது என்று செந்தாமரைக்ண்ணன் கூறியதை அடுத்து ஒப்புக் கொண்டேன்.கடந்த ஜனவரி 2ம் தேதி என் வீட்டுக்கு முத்துலட்சுமியை செந்தாமரைக்கண்ணன் அழைத்து வந்தார்.

முத்துலட்சுமிக்கு என்னை யார் என்று தெரியாது. என் வீட்டு மாடியில் முத்துலட்சுமியை தங்க வைத்தார். இனிமேல் இங்கு தான்இருக்க வேண்டும் என்று கண்டிசன் போட்டுவிட்டுப் போய்விட்டார்.

முத்துலட்சுமிக்கு நல்ல சாப்பாடும், டி.வி. வசதியும் செய்து கொடுத்தேன். முத்துலட்சுமியை கண்காணிக்க என் வீட்டில் ஒருஅதிரடிப்படை வீரர் சமையல்காரராகவும் இன்னொரு வீரர் என் கார் டிரைவராகவும் வேலை பார்த்தனர்.

இதெல்லாம் முத்து லட்சுமிக்கு தெரியாது. முத்துலட்சுமியிடம் அன்பாகப் பழகியதால் அவர் என்னை நம்பினார். பின்பு வீரப்பன்குறித்து பேசத் தொடங்கினார். வீரப்பனை எனக்கு ரொம்ப பிடிக்கும்; நான் அவரைப் பற்றி படித்து இருக்கிறேன் என்று கூறிமுத்துலட்சுமியின் நம்பிக்கையைப் பெற்றேன்.

வீரப்பனுக்கு தன் மீதும் தனது குழந்தைகள் மீது ரொம்பப் பாசம் என்று கூறினார். 2வது மகளை இதுவரை பார்த்தது கிடையாது.அவளைப் பார்க்க ரொம்ப ஆசைப்படுகிறார் என்று என்னிடம் கூறினார்.

நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன். கோத்தகிரியில் எனக்கு ஒரு டீ எஸ்டேட் உள்ளது. அங்கே உள்ள பங்களாவிற்கு வரச்சொன்னால் உன் மகளை காட்டலாம் என்றேன். கோத்தகிரிக்கு வந்து டீ எஸ்டேட்டிற்கு வந்து, வீரப்பன் வந்தால் தப்பித்துச் செல்லவழிகள் உள்ளதா என்று பார்த்து விட்டு சம்மதித்தார்.

மே மாதம் கோத்தகிரிக்கு அழைத்துச் சென்றேன். அந்த வீட்டில் போலீஸார் ரகசிய கேமரா வைத்து இருந்தனர். அந்த வீட்டில்நான், முத்துலட்சுமி, அவரது இளைய மகள் பிரபா, சமையல்காரர், டிரைவருடன் 10 நாட்கள் தங்கியிருந்தேன்.

வீரப்பனுக்கு முத்துலட்சுமி கேசட் மூலம் தகவல் கொடுத்து அனுப்பினார். ஆனால் எதனாலோ வீரப்பன் அப்போது வரவில்லை.

பின்பு வீரப்பனின் கண்பார்வை பாதிக்கப்பட்டு இருப்பதை ஒரு உளவாளி மூலம் முத்துலட்சுமிக்கு வீரப்பன் சொல்லிஅனுப்பினான். அதை நான் அதிரடிப்படைக்குத் தெரிவித்தேன். வீரப்பனைப் பிடிப்பதற்கு ஒரு முக்கிய தகவலாக அதுஅமைந்தது என்றார் பிரியா.

யார் இந்த ப்ரியா?:

இதற்கிடையே ப்ரியாவின் பின்னணி குறித்து நாம் விசாரணை நடத்தியபோது கிடைத்த தகவல்கள் அவ்வளவு நல்லதாக இல்லை.

Shanamugapriya

படம்: நன்றி நக்கீரன்
ப்ரியாவின் முழுப் பெயர் சண்முகப்ரியா. இவர் மருத்தாச்சல மூர்த்தி என்ற நகைக் கடை அதிபரின் மகளாவார். தந்தைக்கும்தாயார் கனகவல்லிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தவுடன் தாயாருடன் வசித்து வந்தார்.

பின்னர் ஊட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கு இவரைத் திருமணம் பேசியிருக்கிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்இருவரும் ஊர் சுற்ற ஆரம்பித்தனர். ஆனால், திடீரென சந்தோஷின் பெற்றோர் திருமணத்துக்கு தடை போட்டிருக்கிறார்கள்.

அவர்களையும் மீறி சந்தோஷை திருமணம் செய்து கொண்டு சில காலம் வாழ்ந்திருக்கிறார் ப்ரியா. ஆனால் இது நெடு நாட்கள்நீடிக்கவில்லை. இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடக்கிறது.

இதையடுத்து உயர் ரக நாய்களை விற்கும் செந்தில் என்பவருடன் ப்ரியாவுக்கு காதல் முளைத்துள்ளது. இருவரும் திருமணம்செய்திருக்கிறார்கள். ஆனால், தனது முதல் திருமணத்தை செந்திலிடம் ப்ரியா மறைத்துவிட்டு இரண்டாவது திருமணம்செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவரம் தெரியவந்தவுடன் செந்தில் அவரிமிருந்து விலகிவிட்டார். தன்னை ப்ரியா ஏமாற்றித் திருமணம் செய்ததாகசெந்திலும் ஒரு வழக்குப் போட்டு அதுவும் அதே கோவை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாம்.

ப்ரியா குறித்து சந்தோஷிடம் கேட்டால், அந்தப் பெண் ஒரு பிராடு என்று பதில் சொல்கிறார். செந்திலிடம் கேட்டால், ப்ரியாவும்அவரது அம்மாவும் பிராடுகள் என்கிறார்.

Priyas mother Kanagavalliவழக்குகளால் வளைக்கப்பட்ட ப்ரியா?

ப்ரியா குறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ஒரு கணவரை ஏமாற்றிய வழக்கு மற்றும் தேயிலை எஸ்டேட்களைவாங்கி விற்றதில் செய்த மோடி ஆகிய வழக்குகளில் சிக்கிய ப்ரியாவை போலீசார் தங்களுக்கு ஆதரவாக பணிய வைத்தேஅதிரடிப்படைக்கு ஆதரவாக வேலை பார்க்க வைத்தார்கள்.

வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே போலீசுக்கு உதவ ப்ரியா முன் வந்தார் என்கிறார்கள். அந்த வகையில்தான் எஸ்.பி அசோக் குமார் ப்ரியாவைச் சந்தித்துப் பேசி முத்துலட்சுமியை அவர் கண்டரோலில் விட்டுள்ளார்.

முத்துலட்சுமியை நீண்ட நாட்களாகவே தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அதிரடிப்படை கடைசியாக கேவைைவடவள்ளியில் உள்ள ப்ரியாவின் வீட்டில் குடியிருக்க வைத்து, அவர் மூலமாக வீரப்பன் குறித்த தகவல்களைத் திரட்டியுள்ளது.

ப்ரியாவிடம் நான் உன்னை என் தங்கச்சினு சொல்லியிருக்கேன்.. இந்த வீட்டில் தான் இனி நீ குடியிருக்க வேண்டும் என்று தன்னைப்ரியாவின் வீட்டில் அசோக்குமார் விட்டுவிட்டுப் போனதாக முத்துலட்சுமி சொல்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X