சர்ச்சைக்கு நடுவே சிபிஎஸ்இ–க்கு புதிய தலைவர் – செயலாளர் நியமனம் – மத்திய அரசு உத்தரவு
டெல்லி: சிபிஎஸ்இ (CBSE) வாரியத்தின் டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் வெடித்துள்ள சர்ச்சைகளை தொடர்ந்து சிபிஎஸ்இ வாரியத்தின் தலைவர் மற்றும் செயலாளரை மத்திய அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஎஸ்இ புதிய தலைவர், செயலாளரை உடனடியாக நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சிபிஎஸ்இ தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மறுமதிப்பீடு வரை தொடர்ந்து பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. சிபிஎஸ்இ.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஓஎஸ்எம் முறை (On-Screen Marking - OSM) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதிப்பெண்கள் குறைந்துள்ளதாக மாணவர்கள் பலர் குற்றம்சாட்டி இருந்தனர்.
வேதாந்த் என்ற ஒரு மாணவர் மறுமதிப்பீட்டுக்காக விடைத்தாள் கோரி இருந்த நிலையில், அவருக்கு வேறொருவரின் விடைத்தாள் கொடுக்கப்பட்டது. இது மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை கோபப்படுத்தி உள்ளது.
இந்த குளறுபடிகளால் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிபிஎஸ்இ வாரியத்தின் ஒட்டுமொத்தத் தேர்வுகள், கல்விப் பிரிவுகள், பள்ளி அங்கீகாரங்கள், முக்கியக் கொள்கை முடிவுகள் மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்துடனான ஒருங்கிணைப்பு என வாரியத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் கவனித்து வந்த இந்த அமைப்பின் தலைவர் தலைவர் ராகுல் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் செயலாளர் ஹிமான்சு குப்தாவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இதன் தொடர்ச்சியா சிபிஎஸ்இ தலைவராக லோகண்டே பிரசாந்த் சீதாராம் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிஎஸ்இ செயலாளராக வருண் பரத்வாஜ் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைகளுக்கு நடுவே மத்திய அரசு இந்த 2 அதிகாரிகளை நம்பி சிபிஎஸ்இ-யை வழிநடத்தும் பொறுப்பை வழங்கி உள்ளது. இதனால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications