விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: தேர்தல் அறிக்கையில் கூறியது போல் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட 4 முக்கிய கோரிக்கைகளை கட்டாயமாக முதல்வர் விஜய் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மகேந்திர குமார் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். இதனை கடந்த திமுக அரசு நிறைவேற்றவில்லை. இந்நிலையில் தான் தற்போது முதல்வர் விஜய் அதனை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

old-pension-scheme-must-be-implemented-tamil-nadu-government-employees-association-request-to-cm-vi

ஏனென்றால் விஜய் தனது தேர்தல் அறிக்கையிலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் இதனால் அரசு ஊழியர்கள் பலரும் தவெகவிற்கு ஓட்டளித்தனர். இந்நிலையில் தான் இந்நிலையில் தான் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்க மாநில தலைவர் மகேந்திர குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விருதுநகரில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''தமிழ்நாடு முதல்வருக்கு (ஜோசப் விஜய்) முதலில் வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். ஏனென்றால் 59 ஆண்டு கால ஆட்சியை மாற்றி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் புதிய மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் நாங்களும் வாக்களித்து உங்களை ஆட்சி கட்டிலில் அமர்த்தி உள்ளோம்.

நீங்களும், உங்களுடைய தேர்தல் அறிக்கையில் அறம், பொருள், இன்பம் என்று 3 வகையாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ள பிரதான விஷயமான பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்ற அறிவிப்பின்படி 01.04.2003 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கப்பட வேண்டும். எண்ணற்ற ஓய்வூதியதாரர்கள் இதை எதிர்பார்த்து கொண்டுள்ளனர். இன்று பணியில் உள்ளவர்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.

இரண்டாவதாக, நீங்கள் உங்கள் தேர்தல் அறிக்கைகளில் கூறியுள்ளவாறு எங்களின் குறைகளை கேட்டு களைவதற்கு தனியாக அரசு பணியாளர் வாரியம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளீர்கள். அரசு பணியாளர் வாரியம் அமைக்க வேண்டும் என்று நாங்கள் நெடுங்காலம் கூறி வருகிறோம்.

3வது விஷயம் என்னவென்றால் கடந்த ஆட்சியில் குறிப்பிட்ட துறைகளை தவிர அடிப்படை ஊதியத்தில் இருக்கும் துறைகளாக இருக்கக்கூடிய அதுவும் காலமுறை ஊதியமாக இல்லாத துறைகளுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி நியமனம் வழங்கப்படவில்லை. சமூக நீதி பின்பற்றப்படவில்லை. இதனை களைவீர்கள் என்ற நம்பிக்கையில் வாக்களித்துள்ளார்கள். எங்களின் துறைகளில் உள்ள சத்துணவு, அங்கன்வாடி, ஊர்புற நூலகங்கள், டேங்க் ஆபரேட்டர்கள், சமையலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

4வதாக தற்காலிக, தினக்கூலியை நிரந்தர ஊதியமாக்க வேண்டும். இதுதான் எங்களின் பிரதான கோரிக்கை. இதனை முதல்வர் நிறைவேற்ற தர வேண்டும். இந்த 4 கோரிக்கைகளை கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+