தனுஷ்- ஐஸ்வர்யா திருமணம் நடந்தது: ஜெ வாழ்த்து
சென்னை:
![]() |
இத் திருமணத்தில் ரஜினியின் உறவினர்கள் 10 கார்களில் பெங்களூரில் இருந்து வந்து கலந்து கொண்டனர். தனுஷ் குடும்பத்திலும்பெரும் எண்ணிக்கையில் உறவினர்கள் பங்கேற்றனர்.
இயக்குனர் பாலசந்தர், நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, தெலுங்கு நடிகரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான மோகன் பாபு,சத்யராஜ், அம்ரீஷ் புரி, சிரஞ்சீவி, சத்ருகன் சின்கா, ஹேமமாலினி, எஸ்.பி.முத்துராமன், மணிரத்னம், இளையராஜா, தேவா,கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ்கிருஷ்ணா, பி.வாசு, பாலாஜி, புஷ்பா கந்தசாமி, டத்தோ சாமிவேலு, இந்திராணி சாமிவேலு,
ஏவி.எம் சரவணன், பாலகுமாரன், வைரமுத்து, இந்து ராம், சோ, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக்சிதம்பரம், பாக்யராஜ், மீனா, சிவக்குமார், சூர்யா, விஜயக்குமார், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர்திருமணத்தில் கலந்து கொண்டனர்.
திருமணம் நடந்த சிறிது நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா வந்தார். அவரை ரஜினி-லதா தம்பதியும் கஸ்தூரிராஜா-விஜயலட்சுமிதம்பதியும் வாயிலில் சென்று வரவேற்று அழைத்து வந்தனர். ஜெயலலிதாவின் காலில் விழுந்து தனுசும் ஐஸ்வர்யாவும் ஆசிபெற்றனர். அவர்களை வாழ்த்திய ஜெயலலிதா திருமணப் பரிசை வழங்கிவிட்டு விடை பெற்றார்.
திருமண அழைப்பிதழ் உடையவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வாசலில் மெட்டல் டிடெக்டர் சோதனைநடைபெற்றது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை மறுநாள் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஆர்.சி. நகர் மேயர் ராமனாதன் செட்டியார்அரங்கில் மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள திரையுலகினர் அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அன்றைய தினம் பகலில் விருந்து அளிக்கப்படுகிறது.
தனுஷ் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த முறைப்படி நேற்றிரவே தனுசின் குடும்பத்தினர் ரஜினியின் வீட்டில் சென்றுதங்கியிருந்து இன்று காலையில் திருமணம் முடித்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்













Click it and Unblock the Notifications