இது பொய் வழக்கு: சங்கராச்சாரியார் புகார்
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் என்னை பொய்யாக சேர்த்திருக்கிறார்கள் என காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள் கூறினார்.
அவரை போலீஸ் காவலில் எடுப்பது தொடர்பாக காவல்துறை தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை காஞ்சிபுரம்மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று நடந்தது.
அப்போது நீதிமன்ற உத்தரவுப்படி நேரில் ஆஜர்படுத்தப்பட்டார் சங்கராச்சாரியார். வழக்கு விசாரணையின்போது, போலீஸ்காவலில் போக நீங்கள் தயாரா என நீதிபதி உத்தமராஜன், சங்ககராச்சாரியாரிடம் கேட்டார்.
அதற்கு ஜெயந்திரர், நான் போலீஸ் காவலில் செல்ல மாட்டேன். அவர்களிடம் என்னை ஒப்படைக்காதீர்கள். என் உடலில்சர்க்கரை அளவு ஏறிப் போய் இருக்கிறது. மருத்துவர்களை அழைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
என் மீதான குற்றச்சாட்டு பொய்யானது. இந்த கொலைக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. எனவே என்னை விடுவிக்கவேண்டும். பொய்யான சாட்சியங்களைத் தயார் செய்து இந்த வழக்கில் என்னை சேர்த்திருக்கிறார்கள்.
என்னை போலீஸ் காவலில் ஒப்படைத்தால் அது நேர்மையான செயலாக இருக்காது, அது நீதியான செயலும் அல்ல.
ஆந்திராவில் வைத்து என்னை கைது செய்வதாகவே போலீஸ் சொல்லவில்லை. காஞ்சி மடத்துக்கு அழைத்துச் செல்வதாகத் தான்சொன்னார்கள் என்றார்.
உங்கள் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று நீதிபதி கேட்டபோது, நான் நன்றாக இருப்பதாக சொல்ல முடியாது என்றார்.
இதற்கு நீதிபதி, நீங்கள் முழு நலத்துடன் இருப்பதாக உங்களை பரிசோதித்த டாக்டர்கள் சொல்கிறார்களே என்று கேட்டபோது,இல்லை நான் நலமுடன் இல்லை என்றார் சங்கராச்சாரியார்.
இதையடுத்து வாக்குமூலத்தில் கையெழுத்திடும்படி நீதிபதி கூறியபோது ஜெயேந்திரர் மறுத்தார். பின்னர் கைரேகை மட்டும் பதிவுசெய்தார்.
சங்கர மடத்தின் வழக்கப்படி மடாதிபதிகள் கையெழுத்திடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகாரியம் என்ற பதவியில்இருப்பவர் தான் மடாதிபதிக்காக கையெழுத்திடுவார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications