கொலையாளியின் காதலி வீட்டில் போலீஸ் ரெய்ட்
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சென்னையைச் சேர்ந்த காண்டிராக்டரின் கள்ளக் காதலியின்வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் உட்பட 18 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயேந்திரர் முதல் குற்றவாளியாகவும், காண்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியன் 2-வது குற்றவாளியாகவும், தாதா அப்பு 3-வதுகுற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் ரவியும் அப்புவும் தொடர்ந்து தலைமறைவாகவே உளளனர். இருவரது பாஸ்போர்ட்டும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
ரவி சுப்பிரமணியனுக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் சென்னை மேத்தா நகரில் வசிக்கிறார்கள். ரவிசுப்பிரமணியன் மூலம்தான் கூலிப்படையினருக்கு ஜெயேந்திரர் பணம் கொடுத்ததாக போலீஸார் கூறுகின்றனர்.
கூலிப்படைக்கு பேசப்பட்ட ரூ.50 லட்சத்தில் ரூ.10 லட்சம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மீதிப் பணம்இந்தியன் வங்கியிலிருந்து எடுத்து ரவி சுப்பிரமணியன் மூலம் கொடுக்கப்பட்டிருக்கிறது. காஞ்சி மடத்துக்குச் சொந்தமானஆசிரியர் பயிற்சி பள்ளியின் விரிவாக்கத்துக்கு செலவு செய்ய இந்த பணம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கர மட கணக்கில்கூறப்பட்டுள்ளது.
ஆனால் விரிவாக்கப் பணிக்கு ரூ.13 லட்சம் வரைதான் செலவிடப்பட்டுள்ளது என்றும் மீதிப்பணம் கூலிப்படையினருக்கு போய்ச்சேர்ந்துள்ளதாக போலீஸாருக்கு ஆதாரம் சிக்கி உள்ளது.
இந் நிலையில் ரவி சுப்பிரமணியனுக்கு சென்னை தி.நகரில் உள்ள ராமநாதபுரம் தெருவில் ஆசிரியை ஒருவர் கள்ளக் காதலியாகஇருப்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அந்த ஆசிரியையின் வீட்டில் அதிரடி சோதனைநடத்தினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரவி சுப்பிரமணியனைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
சங்கர மடம் மறுப்பு:
ஐசிஐசிஐ கணக்கில் இருந்து சமீப காலத்தில் பெரும் தொகை எடுக்கப்படவே இல்லை என்றும், அதிகபட்சமாக ரூ. 3 லட்சம்மட்டுமே எடுக்கப்பட்டதாகவும் சங்கர மட நிர்வாகிகள் கூறுகின்றனர். ரூ. 10 லட்சம் எடுக்கப்பட்டு கொலையாளிகளுக்குத்தந்ததாக போலீஸ் கூறுவது அண்டப் புழுகு என்கின்றனர்.
ஆனால், பணம் எடுக்கப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக போலீஸ் கூறுகிறது.












Click it and Unblock the Notifications