காவல் நிலையத்தில் ஜெயேந்திரருடன் வழக்கறிஞர் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சங்கராச்சாரியாரை அவரது வழக்கறிஞர் கிருஷ்ணசாமி சந்தித்துப் பேசினார்.

போலீஸ் காவலில் இருக்கும் ஜெயேந்திரரை, தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை அவரது வழக்கறிஞர் சந்திக்கலாம் எனகாஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கியுள்ளார்.

இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு வழக்கறிஞர் கிருஷ்ணசாமி மகளிர் காவல் நிலையத்துக்கு வந்தார். சங்கராச்சாரியாரை சந்திக்கஅவருக்கு அனுமதி தரப்பட்டது. 7 மணி முதல் 8 மணி வரை அவரைச் சந்தித்துள்ளார் கிருஷ்ணசாமி.

இச் சந்திப்புக்குப் பின் நிருபர்கள் கண்ணில் படாமல் சாதுர்யமாக அவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

ஜெயேந்திரர் குறித்து கிருஷ்ணசாமியின் கருத்தை அறிய நிருபர்கள் நெடுநேரம் காத்திருந்தனர். இரவு 9 மணியளவில் தான் கிருஷ்ணசாமிஅங்கு வந்துவிட்டுத் திரும்பிப் போன விவரமே தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+