அசோக் சிங்கலுக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை:
ஜெயேந்திரர் கைதுக்கு சோனியா காந்திதான் காரணம் என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கல் கூறியிருப்பதுவிஷமத்தனமானது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதற்கு கிறிஸ்தவரான சோனியா காந்திதான் காரணம் என்றுஅசோக் சிங்கால் கூறியிருப்பது அநாகரீகமானது, அடிப்படை இல்லாதது.
சோனியா கிறிஸ்தவர், ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட இடமான மகபூப் நகர் சார்ந்துள்ள ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகரரெட்டி ஒரு கிறிஸ்தவர் என்று கூறி எப்படியாவது இந்தப் பிரச்சனைக்கு மதச் சாயம் பூச அசோக் சிங்கல் முயற்சித்துள்ளார்.
ஜெயேந்திரர் கைது தொடர்பான விளக்கத்தை முதல்வர் ஜெயலலிதா அறிக்கையாகவே சட்டசபையில் வாசித்துள்ளார். இந்நிலையில் பொய் சொல்கிறோம் என்று தெரிந்து கொண்டே பொய்யை சொல்வது விஷமத்தனமானது என்று கூறியுள்ளார்கருணாநிதி.
பாஜகவுக்கு வைகோ கண்டனம்:
இதற்கிடையே இன்று கரூர் வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜெயேந்திரர் கைது நடவடிக்கையை பா.ஜ.க. மதப்பிரச்னையாக்க முயல்வதாகவும் இந்தக் கைது நடவடிக்கையில் எந்த அரசியல் பின்னணியும் இல்லை என்றும் கூறினார்.
இதே போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லக்கண்ணுவும் இந்த விவகாரத்தில் பா.ஜ.கவின்அணுகுமுறையைக் கண்டித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications