திருடிய போலீஸ், பிடித்த திருடர்கள்!
சென்னை:
தாம்பரம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பணத்தை இரண்டு போலீஸ்காரர்களே திருடினர்!!. இந்தத் திருட்டு குறித்துஇன்ஸ்பெக்டரிடம் இரு திருடர்கள் காட்டிக் கொடுத்தனர்!!!.
தீபாவளிப் பண்டிகைக்கு முதல் நாள் தாம்பரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களான ஹரிதாஸ் மற்றும் பிரேம்குமார் ஆகியஇருவரும் திருட்டு வழக்கு ஒன்றில் இரண்டு பேரை பிடித்து காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்தனர்.
காவல் நிலையத்தில், வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை லாக்-அப்பில் அடைத்தனர்.
திருடர்களை லாக்-அப்பில் போட்ட போலீஸ்காரர்கள் இருவரும், காவல் நிலையத்தில் இருந்த ஒரு பெட்டியைத் திருட்டுச் சாவி போட்டுத்திறந்து, அதில் இருந்த பணத்திலிருந்து சில கட்டுக்களை எடுத்து தங்களது பைகளில் வைத்துக் கொண்டனர்.
இதை லாக்-அப்பில் இருந்த இரு திருடர்களும் பார்த்து விட்டனர். இதனால் சங்கடத்தில் நெளிந்த இரு போலீஸாரும், திருடர்களைவிடுவித்து அனுப்பிவிட்டனர். மேலும் தங்களது திருட்டுத்தனத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் அன்போடு வேண்டியும்கொண்டனர்.
இதையடுத்து தீபாவளி சமய திருட்டுச் சம்பவம் குறித்து அதே திருடர்களை இன்ஸ்பெக்டர் குணசேகரன் கைது செய்து காவல்நிலையத்துக்கு இழுத்து வந்தார். அவர்களைப் பார்த்ததும், போலீஸார் ஹரிதாஸ், பிரேம்குமார் இருவருக்கும் பீதி ஏற்பட்டது.
லாக்-அப்பில் வைத்து அந்த இரு திருடர்களையும் இன்ஸ்பெக்டர் அடித்து, நொறுக்க, ஐயா எங்களை மட்டும் திருடங்கன்னு சொல்றீங்க.உங்க ஸ்டேசன்ல இருக்கிற பெட்டியில இருந்தே காசை ரெண்டு போலீஸ்காரங்க திருடுனாங்க.. அதையெல்லாம் நீங்க தட்டிக் கேக்கமாட்டீங்களா என்று இரு போலீஸ்காரர்களையும் போட்டுக் கொடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ந்து போன இன்ஸ்பெக்டர், இரு காவலர்களையும் அழைத்து விசாரித்துள்ளார். பெட்டியையும் திறந்து பார்த்துள்ளார். பணம்மிஸ் ஆனது உறுதியானது.
இதில் ஹரிதாஸ் உண்மையை ஒப்புக் கொண்டு திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார். ஆனால் பிரேம்குமார் திருடவே இல்லைஎன்று சாதித்துள்ளார். இதனால் கோபமடைந்த இன்ஸ்பெக்டர், பிரேம்குமார் மீது துறைரீதியிலான நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பணம், ஒரு வழக்கில் கைப்பற்றப்பட்ட பணம் என்று தெரிகிறது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications