காஞ்சி அதிமுக எம்எல்ஏ மரணம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

காஞ்சிபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ் .திருநாவுக்கரசு (55) இன்று மரணமடைந்தார்.

செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியில் நின்று தோல்வியடைந்த திருநாவுக்கரசு, 2001 சட்டசபை தேர்தலில் காஞ்சிபுரம்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். செய்தி, விளம்பரம், சுற்றுச் சூழல், வனம் ஆகிய துறைகளின் அமைச்சராகப்பொறுப்பேற்றார்.

சில மாதங்கள் மட்டுமே அமைச்சராக அவர் நீடித்தார். பின்பு அவரது பதவி பறிக்கப்பட்டது. அடுத்து காஞ்சிபுரம் மேற்கு மாவட்டஅதிமுக செயலாளராக இருந்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு அந்த பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். அப்போதிருந்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகஅவைத்தலைவர் பதவியில் இருந்த வந்தார்.

இந் நிலையில் அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களாக உடல் நிலை மோசமடைந்து, சுவாசிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார்.

இன்று மதியம் 2 மணிக்கு திருநாவுக்கரசு திடீரென்று மரணம் அடைந்தார். அவரது உடல் காஞ்சிபுரத்தில் உள்ள அவரதுஇல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. நாளை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

திருநாவுக்கரசுக்கு மைதிலி (40) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+