ஜெயேந்திரர் பதவி விலக செளதாலா கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
ரீவாரி:
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெயேந்திரர் காஞ்சி மடத்தின் பீடாதிபதி என்ற உயர்ந்த பொறுப்பிலிருந்து விலகவேண்டும் என்று அரியானா மாநில முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் காஞ்சி பீடாதிபதி என்ற மிக உயர்ந்த, கண்ணியமிக்க பொறுப்பிலிருந்துஜெயேந்திரர் விலக வேண்டும். இந்த விவகாரத்தில் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் நடந்து கொள்ளும் முறைகள் முற்றிலும்தவறானவை.
அவர்களது நடவடிக்கைகள் நாட்டின் சட்டம் மற்றும் நீதித் துறையை அவமானப்படுத்தும் செயலாகும். சட்டத்தின் முன்அனைவரும் சமம் என்பதை பாஜகவினர் உணர வேண்டும்.
இந்த வழக்கில் ஆழமான விசாரணை நடத்தி முழு உண்மைகளையும் வெளிக் கொணர வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications