தீபவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சென்னைக்கும், திருவண்ணாமலைக்கும் இடையே 4 சிறப்பு ரயில்களை இயக்க தென்னகரயில்வே முடிவு செய்துள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை தீபத் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள்.

இதையொட்டி சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 4 சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.

அதன்படி வருகிற 26ம் தேதி காலை 9.30 மணிக்கும், மாலை 4.45 மணிக்கும் சென்னை தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்குசிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

மறு மார்க்கத்தில் இரவு 11 மணிக்கும் அடுத்த நாள் காலை 6 மணிக்கும் தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+