Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணத் தகராறால் சிக்கிய கொலையாளிகள்!!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் கதிரவன் தந்துள்ள ரகசிய வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:

சென்னையைச் சேர்ந்த நான் லயோலா கல்லூரியில் படித்தேன். வேலை கிடைக்காததால் அப்புவிடம் டிரைவாக சேர்ந்தன். பின்னர்அவருக்கு மேனேஜரும் ஆனேன்.

அடிக்கடி ஏதாவது அடிதடி, கடத்தல் வேலைகளைக் கொடுப்பார். அதை முடித்தவுடன் பணம் தந்துவிடுவார். இது போகசம்பளமாக மாதம் ரூ. 10,000 தந்து வந்தார்.

சங்கர மடத்துடன் மோதிய மந்தைவெளி ராதாகிருஷ்ணன் என்பவரை கொலை செய்ய அப்பு என்னிடம் கூறினார். நான் ரெளடிசின்னாவிடம் இந்த வேலையை ஒப்படைத்தேன். இந்தக் கொலைக்கு ரூ. 1 லட்சம் கூலி கேட்டான் சின்னா. அதைத் தர அப்புஒத்துக் கொண்டு, அட்வான்சாக ரூ. 10,000 தந்தார்.

சின்னா தலைமையில் கூலிப் படையினர் மந்தைவெளியில் வைத்து ராதாகிருஷ்ணனை அரிவாளால் வெட்டினார்கள். ஆனால்,அவர் போட்ட கூச்சலில் பெரும் கூட்டம் கூடிவிட்டதால், அவரைக் கொல்ல முடியாமல் போய்விட்டது.

இந் நிலையில் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி நான், அப்பு மற்றும் மடத்துக்கு நெருக்கமான கட்டட காண்ட்ராக்டர் ரவிசுப்பிரமணியம் ஆகியோர் காஞ்சி சங்கர மடத்துக்குச் சென்றோம். அப்போது ராதாகிருஷ்ணனை கொன்றே தீருவது என்று முடிவுசெய்யப்பட்டது.

ஆனால், திரும்பி வந்த சில நாட்களில் ராதாகிருஷ்ணனை விட்டுவிடு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேனேஜர்சங்கரராமனைத் தீர்த்துக் கட்டு என்றார் அப்பு. சங்கரமடத்துக்கு இவனால் தான் ரொம்ப தொல்லை வருகிறது.ராதாகிருஷ்ணனைவிட இவன் தான் பெரிய தொல்லை என்று அதற்குக் காரணமும் கூறினார் அப்பு.

இதையடுத்து மீண்டும் சின்னா தலைமையிலான கூலிப் படையை தொடர்பு கொண்டேன். இந்தக் கொலைக்கு ரூ. 50 லட்சம்கேட்டான் சின்னா. அதைத் தர ஒப்புக் கொண்டார் அப்பு. இதையடுத்து அட்வான்ஸாக ரூ. 10 லட்சம் சின்னாவிடம் தரப்பட்டது.

சங்கரராமனை தலையில் வெட்டி அவர் உயிர்போகச் செய்வதை உறுதி செய்யுங்கள் என்று அப்பு சொன்னார். அதை சின்னாவிடம்சொன்னேன். சரியென்று கூறிவிட்டுக் கிளம்பினான்.

செப்டம்பர் 2ம் தேதி அப்பு, ரவி சுப்பிரமணியம் ஆகியோர் சின்னா தலைமையிலான கூலிப் படையிரை அழைத்துக் க்ெண்டுகாஞ்சிபுரம் சென்றனர். நான் தான் காரை ஓட்டினேன். நேராக சங்கரராமன் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார் ரவி சுப்பிரமணியம்.அப்போது டிவிஎஸ்-50ல் வந்து இறங்கிய சங்கரரானை அடையாளம் காட்டிய ரவி சுப்பிரமணியம், இவன் தான் அவன்,நாளைக்கு கதையை முடித்துவிடுங்கள் என்றார்.

இதையடுத்து கொலைக்கான திட்டம் போட்டோம். தெரு குறுகலாக இருப்பதால் காரில் போக வேண்டாம், பைக்கில் செல்லுங்கள்என்று சின்னா கோஷ்டியிடம் நான் சொன்னேன். அவர்களும் ஒப்புக் கொண்டார்கள்.

இதையடுத்து சென்னையில் இருந்து 3 பைக்குகளில் மறுநாள் 6 பேர் சின்னா தலைமையில் காஞ்சிபுரம் புறப்பட்டனர்.

அம்பிகாபதி, குமார் ஆகியோர் ஒரு பைக்கிலும், சின்னா மற்றும் மாட்டு பாஸ்கள் இன்னொரு பைக்கிலும், மூன்றாவது பைக்கில்அனில் மற்றும் ஆனந்த் ஆகியோர் சென்றனர். அவர்களை சென்னையில் இருந்து அனுப்பி வைத்த நான் கைச் செலவுக்கு ரூ.1,000 தந்தேன்.

கொலைக்கான கூலியின் அடுத்த இன்ஸ்டால்மென்ட்டாக ரூ. 1 லட்சத்தை தனியாகத் தந்தேன். இதை அப்பு என்னிடம் கொடுத்துகொடுக்கச் சொன்னார். பணத்தை அம்பிகாபதி தான் வாங்கினான்.

அடுத்த சில மணி நேரத்தில் வாலாஜாபாத்தில் இருந்து அம்பிகாபதியும் மாட்டு பாஸ்கரும் என்னை செல்போனில் தொடர்புகொண்டு பேசினர். சங்கரராமனை வெட்டியாச்சு என்றனர். இதையடுத்து அமைதியாக சென்னை வரச் சொன்னேன்.

மாலையில் அண்ணா நகரில் இருந்து மீண்டும் அந்த 6 பேரும் என்னுடன் பேசினார்கள். அவர்களை மயிலாப்பூர் நட்சத்திரஹோட்டலுக்கு வரவழைத்து ரூ. 1 லட்சம் தரச் சொல்லி பணத்தைத் தந்தார் அப்பு. அதைப் போலவே பணத்தைத் தந்தேன்.

5ம் தேதி கே.கே. நகர் பஸ் ஸ்டாண்டில் வைத்து ரூ. 40,000த்தை சின்னாவிடமும், 6ம் தேதி மீண்டும் ரூ. 40,000மும் தந்தேன். 7ம்தேதி வட பழனியில் வைத்து ரூ. 3 லட்சத்தை சின்னாவிடம் தந்தேன்.

இப்படி பல கட்டமாக பணம் தரப்பட்டது. போலி குற்றவாளிகளை சரணடைய வைக்கச் சொல்லி அப்பு சொன்னதால்சின்னாவிடமே அந்த வேலையைத் தந்தேன். அதற்கு ஆள் ரெடி செய்ய ரூ. 20,000த்தை தனியே வாங்கிக் கொண்டான் சின்னா.

சுந்தர் என்பவன் மூலம் போலி குற்றவாளிகள் 5 பேரை சரணடைய வைத்தான் சின்னா.

சங்கரரான் கொலைக்காக சின்னாவிடம் நான் தந்த பணத்தை அவன் தனது கூட்டாளிகளுக்கு சரியாகப் பிரித்துத் தரவில்லை.இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது என்னிடம் வந்த சின்னா, கொலைக்கு ரூ. 50 லட்சம் கூலி பேசிவிட்டு,சும்மா ரூ. 40,000மாகவே தந்து கொண்டிருக்கிறீர்கள், என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களா என்று கத்தினான்.

இதனால் எங்களுக்குள்ளும் பிரச்சனை உருவானது. இதற்கிடையே கோயம்பேட்டில் வைத்து சின்னாவுக்கும் பிறகொலையாளிகளுக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. இதை ஹோட்டல்காரர் போலீசிடம் சொல்ல, அவர்களை பிடித்துச் சென்றதுபோலீஸ்.

அவர்களிடம் விசாரணை நடந்தபோது காஞ்சி கொலையில் இவர்களுக்குத் தொடர்பிருப்பதை போலீசார் உணர ஆரம்பித்தனர்.இந் நிலையில் போலியாக சரணடைய வைக்கப்பட்ட 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது, சின்னா கோஷ்டியைஅவர்கள் காட்டித் தந்துவிட்டனர்.

அப்படித்தான் உண்மையான குற்றவாளிகள் சிக்கினர். இவ்வாறு வாக்குமூலம் தந்துள்ளான் கதிரவன்.

கொலைக்காக சங்கர மடத்தின் கட்டட காண்ட்ரக்டர் ரவி சுப்பிரமணியம் மற்றும் இன்னொருவர் மூலம் ரூ. 30 லட்சத்தை வாங்கியஅப்பு அதை சின்னா உள்ளிட்ட கொலையாளிகளுக்குத் தராமல் தானே சுருட்ட முயன்றதால் தான் விவகாரமாகி, கொலையாளிகள்பிடிபட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+