பண்ணையார்: விசாரணை கமிஷனுக்கு தடை
சென்னை:
வெங்கடேச பண்ணையாரை சென்னையில் போலீசார் சுட்டுக் கொன்றது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ராமன்கமிஷனுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த பெப்சி முரளி என்ற பாலமுரளி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில்அவர் கூறியிருப்பதாவது:
வெங்கடேசப் பண்ணையாருடன் 4 ஆண்டுகளுக்கு முன்பு எனக்குப் பழக்கம் ஏற்பட்டது.
அவர் கடந்த 2003 செப்டம்பர் 25ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ராமன் கமிஷனில்போலீஸ் துணை கமிஷ்னர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சில போலீஸ் அதிகாரிகள் பொய்த் தகவல்களை அளித்துள்ளனர்.
சமீர் என்ற தொழில் அதிபரை மிரட்டுவதற்காக துப்பாக்கியுடன் வெங்கடேசப் பண்ணையார் தயாராக இருந்தார் என்றுபோலீஸாரிடம் நான் கூறியதாக கூறியுள்ளனர். நான் அவ்வாறு போலீஸாரிடம் கூறவில்லை. விசாரணையில் இருந்துதப்பிப்பதற்காக அவர்கள் பொய்த் தகவல்களைக் கூறுகின்றனர்.
பண்ணையார் கொலை தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அதைவிடுத்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது சரியல்ல. இதன் மூலம் சாட்சியங்களை அழிக்க தமிழக அரசு முயற்சிக்கிறது. இந்தக்கொலை வழக்கில் விசாரணைக் கமிஷனை அமைத்ததே தவறு, தேவையில்லாதது.
எனவே நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி அரசு வெளியிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்என்று தனது மனுவில் கோரியிருந்தார் பெப்சி முரளி. இவர் பண்ணையாரின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனுவை விசாரித்த நீதிபதி தினகரன், ராமன் கமிஷன் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications