திமுக கிளப்பும் சந்தேகத்தின் பின்னணி!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காஞ்சி மடத்துக்கும் சக்தி மிக்க குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக பண பேரம் இருந்து வந்ததாக இப்போதுதகவல்கள் கசிகின்றன.

சக்தி வாய்ந்த அவர்களின் பெரும் பணம் (பல நூறு கோடிகளாம்) வெளியில் யார் கண்ணிலும் படாமல் இருப்பதற்காக சங்கரமடத்தின் அறக்கட்டளையொன்றில் கணக்கில் ரகசியமாக போடப்பட்டதாம்.

இப்படி பணத்தை மறைத்து வைக்க சங்கராச்சாரியார் உதவ மறுத்ததாகவும், இதனால் தான் அவருக்கு இப்போது சிக்கல் என்றுகூறப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் இப்போது வரும் தகவல்கள் நேருக்கு மாறானவையாகவே உள்ளன.

அந்த சக்தி வாய்ந்தவர்கள் பணத்தை அவர்களது வேண்டுகோளின்படி மடம் பதுக்கி வைக்க உதவியதாகவும், ஆனால், அவர்கள்திருப்பிக் கேட்டபோதுதான் சிக்கலே வந்தது என்கிறார்கள்.

அந்தப் பணம் ஒரு மருத்துவமனை திட்டத்தில் முடக்கப்பட, கடைசியில் அந்த மருத்துவமனையை மையமாக வைத்து, அதுயாருக்குச் சொந்தம் என்று அதிகாரச் சண்டை நடக்க, விவகாரம் வெடித்துவிட்டது என்கிறார்கள்.

இப்போது ஜெயிலுக்குப் போய்விட்ட நிலையில், கணக்கு வழக்குகளை நேர் செய்துவிட மடம் முன் வந்திருப்பதாகவும்,முக்கியமான ஆடிட்டர்கள், டெல்லி வரை நெருக்கமுள்ள விஐபிக்கள் தலையிட்டு அந்த செட்டில்மெண்ட் வேலையை துரிதமாக,அதே நேரத்தில் படு ரகசியமாக ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

அந்த பலநூறு கோடிகளில் முதல் கட்டமாக சுமார் 10 சதவீதத்தை சக்தி மிக்கவர்களிடம் திருப்பித் தந்துவிட்டார்களாம்.

இதையெல்லம் இன்டெலிஜென்ஸ் பீரோ கண்கொத்திப் பாம்பாக டிராக் செய்து கொண்டிருப்பதாகவும், இந்த மத்திய உளவுவட்டாரங்களில் இருந்து கிடைக்கும் விவரங்களை கையில் வைத்துக் கொண்டு தான் திமுக தலைவர் கருணாநிதி,சங்கராச்சாரியாரின் கைது விவகாரத்தின் பின்னணி குறித்து நாளொரு சிவகாசி சந்தேக குண்டை வீசிக் கொண்டிருப்பதாகச்சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+