கதிரவனின் பல்டி: அரசுத் தரப்பு டென்சன்
காஞ்சிபுரம்:
போலீஸார் தன்னை அடித்து உதைத்து வாக்குமூலம் வாங்கியதாக கதிரவன் கூறிய பல்டி (மறு)வாக்குமூலம் செல்லாது என்றுஎஸ்.பி. சக்திவேல் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
164 பிரிவின் கீழ் கதிரவன் கொடுத்த வாக்குமூலம் தன்னிச்சையாக கொடுக்கப்பட்டது தான். யாருடைய துன்புறுத்தலும் இன்றிநானாகவே முன்வந்து கொடுக்கிறேன் என்று கதிரவன் நீதிபதியிடம் சொல்லி இருக்கிறார்.
இது தொடர்பாக அவரிடம் நீதிபதி 50 கேள்விகள் வரை கேட்டு சம்மதம் பெற்ற பிறகு மறுநாள்தான் வாக்குமூலம்வாங்கப்பட்டது. மேலும் 24 மணி அவகாசம் தந்த நீதிபதி, நன்றாக யோசித்துவிட்டு வந்து வாக்குமூலம் தருமாறு சொன்னார்.அதன் பின்னர் தான் கதிரவன் பூட்டிய அறையில் நீதிபதியிடம் வாக்குமூலம் தந்தார்.
எனவே அடித்து துன்புறுத்தினார்கள் என்று கூறுவதை யாரும் நம்ப முடியாது. மேலும் நீதிபதிதான் அவனிடம் விசாரித்துவாக்குமூலம் வாங்கி உள்ளார். அப்போது அங்கு போலீஸார் கூட உடனிருக்கவில்லை.
அப்படியிருக்கும்போது கதிரவன் தனது நிலையை மாற்றி கூறி இருக்கிறார். இதுவும் பதிவு செய்யப்பட்டுள்ளது அவ்வளவுதான்.மற்றபடி இதனால் வழக்கிற்கு பின்னடைவு ஏற்படாது. கதிரவனின் 2வது வாக்குமூலம் செல்லுபடியாகாது என்றே கருதுகிறேன்என்றார் சக்திவேல் டென்சனாக.
அரசு வழக்கறிஞர் பேட்டி:
அரசு வழக்கறிஞர் ஜெயக்குமார் கூறுகையில்,
கதிரவன் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது. சிறையில் மருத்துவர்கள் குற்றவாளிகளுக்கு தினமும் மருத்துவ பரிசோதனைநடத்துகிறார்கள். காயம் இருந்தால் சிறை மருத்துவர்களிடம் கதிரவன் தெரிவித்து இருக்கலாம்.
கதிரவன் தனது வழக்கறிஞரின் ஆலோசனையின்படிதான் பல்டி அடித்திருக்கிறான்.
ரகசிய வாக்குமூலம் அளிக்கும்போது யாரும் தங்களை நிர்பந்திக்கிறார்களா என்று நீதிபதி கேட்பார். அப்போது கதிரவன், தனதுஉடலில் காயம் ஏற்பட்டது பற்றியோ போலீஸார் தன்னை அடித்து துன்புறுத்தி வாக்குமூலம் அளிக்க கட்டாயப்படுத்தியதுபற்றியோ கூறியிருக்கலாம்.
அவ்வாறு செய்யாமல் கதிரவன் அடித்த பல்டி உண்மைக்கு புறம்பானது என்பது புலனாகிறது என்றார்.
164 வது பிரிவின்கீழ் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பவர்களுக்கு தினமும் மருத்துவப் பரிசோதனை நடைபெறும். உடலில்காயங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை வாக்குமூலம் அளிப்பதற்கு முன்னரும், பின்னரும் மருத்துவர்கள் சோதிப்பார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
பணத் தகராறால் சிக்கிய கொலையாளிகள் !!
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications