சந்திரிகாவுக்கு பிரபாகரன் கடும் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இடைக்கால சுயாட்சி அதிகாரத் திட்டத்தின் கீழ் நிபந்தனையற்ற முறையில், காலம் தாமதிக்காமல் உடனே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க இலங்கை அரசு முன் வர வேண்டும் என விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார்.

Prabakaranகிளிநொச்சியில் இன்று மாவீரர் தினத்தையொட்டி பொது மக்கள் மத்தியில் அவர் ஆற்றிய உரை:

தமது தேசத்தின் விடுதலையை உன்னதமாக நேசித்து, அந்த உயரிய லட்சியத்துக்காக சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களை போற்றிவணங்கும் புனித நாள் இது.

உலகே வியக்கும் வகையில் போர் முனைகளில் எதிரிப் படைகளை விரட்டி வெற்றி ஈட்டினோம். சிங்கள் ராணுவ ஆக்கிரமிப்பில் இருந்துதாயக மண்ணின் பெரும்பகுதியை மீட்டெடுத்து அங்கு எங்கள் நிர்வாகத்தை நிறுவினோம்.

தமிழ் தேசிய மக்களின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தி உலகின் கவனத்தை திருப்பினோம். எனினும் மாவீரர் கண்டஇலட்சியக் கனவு இன்னும் நிறைவு பெறவில்லை, தாயக மண் இன்னும் முழுமையாக விடுதலை பெறவில்லை. எங்கள் மக்கள் இன்னும்முழுச் சுதந்திரம் அடைந்துவிடவில்லை.

எங்களது மக்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைபட்டு, மிதிபட்டு வாழ்கிறார்கள். சொந்த மண்னில் இருந்து வேர் அறுபட்டு இடம்பெயர்ந்த பல்லாயிரணக்கணக்கானோர், பிறந்த பூமிக்கு திரும்ப முடியாமல் அகதி முகாம்களில் அல்லல் படுகிறார்கள். எங்கள் மக்களின்துயரமும் துன்பமும் தொடர்கிறது.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் என்றுமில்லாத ஒரு இக்கட்டான, சிக்கலான சூழ்நிலையை இன்று எதிர்கொண்டுள்ளோம். போரும்இல்லாமல், நிலையான சமாதானமும் இல்லாமல், இயல்பு வாழ்க்கையும் இல்லாமல், இடைக்காலத் தீர்வுமின்றி, இனப் பிரச்சனைக்குமுடிவும் இல்லாமல் ஒரு அரசியல் வெறுமைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்த அரசியல் சூனியம் நீடித்தால் அது லட்சியப் போராட்டத்துக்கு பங்கத்தை ஏற்படுத்திவிடும்.

அமைதிக்காக ஆயுதப் போருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, சமாதான வழி மூலமாக சகல முயற்சிகளையும் நேர்மையுடனும் உறுதியுடனும்மேற்கொண்டோம்.

நார்வேயின் உதவியுடன் சில நாடுகளில் நடந்த சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்றோம். 6 மாதங்கள் நீடித்த 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகளும்அர்த்தமின்றி, பயனின்றி போய்விட்டன.

இயல்பு நிலை திரும்பவும், இடம் பெயர்ந்த மக்களை மீட்டு மீண்டும் குடியமர்த்தவும், புனர்வாழ்வளிக்கவும், கட்டுமானப் பணிகளைச்செய்யும் அமைக்கப்பட்ட துணைக் குழுக்கள் செயலிழந்து போய்விட்டன.

இவை ஒருபுறம் இருக்க இலங்கை அரசு எங்கள் இயக்கத்தை ஓரம் கட்டிவிட்டு அமெரிக்காவில் நடந்த உதவி வழங்கும் நாடுகளின்மாநாட்டில் கலந்து கொண்டது. நம்மை ஒதுக்கி வைத்தது.

இலங்கை அரசின் செயல்பாடுகளால் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்ததால் தான், அமைதிப் பேச்சுக்களில் இருந்து வெளியேறினோம்.அதே நேரத்தில் பேச்சுவார்த்தையை ஒரேயடியாக முறித்து அமைதி முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நாங்கள் விரும்பவில்லை.

பேச்சு நின்றுபோன நிலையில், இடைக்கால நிர்வாகத்தை அமைக்க திட்ட வரைவை முன் வைக்குமாறு முந்தைய பிரதமர் ரணில்விக்கிரமசிங்கேயின் அரசிடம் வேண்டுகோள் வைத்தோம். ஆனால், ரணில் அரசு வைத்த 3 வரைவுகளுமே எங்களுக்கு திருப்திதரவில்லை.

மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களும் அந்தத் திட்ட வரைவுகள் இருந்தன. இதையடுத்தே நாமே ஒரு திட்ட வரைவை உருவாக்கமுடிவெடுத்தோம். தமிழ் மக்களின் கருத்தை பெற்று, பல நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் அரசியல் அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள்,அரசியலமைப்பு நிபுணர்களின் ஆலோசனையுடன் இடைக்காலத் தன்னாட்சி நிர்வாகத்திற்கான திட்டத்தை தயாரித்தோம்.

நடைமுறைக்கு சாத்தியமான இத் திட்டம், மக்களின் அவசர வாழ்நிலைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாக, உருப்படியானஅதிகாரங்களைக் கொண்டதாக அமைந்தது. இத் திட்டத்தை கடந்த ஆண்டு நவம்பரில் ரணில் அரசிடம் வழங்கினோம்.

அந்தத் திட்டத்தை உலக நாடுகள் பலவும் பாராட்டின. ரணில் அரசும் நிராகரிக்கவில்லை. அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளைஆரம்பிக்க முன் வந்தது.

ஆனால், அந்த இடைக்கால நிர்வாகத் திட்டத்தை எதிர்த்த இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவியும் ஜனாதிபதியுமான சந்திரிகாகுமாரதுங்கா, அதை தமிழீழத் தனியரசுக்கு இடப்பட்ட அஸ்திவாரம் என்று சொல்லி, அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

இலங்கையை அரசியல் நெருக்கடிக்குத் தள்ளினார். பாதுகாப்புத்துறை உள்ளிட்டவற்றை தனது கட்டுப்பாட்டில் எடுத்தார். அடுத்த 3மாதத்தில் ரணில் அரசை கவிழ்த்தார்.

இந்தாண்டு நடந்த பொதுத் தேர்தல் சிங்கள், தமிழர் பகுதிகளின் இன முரண்பாட்டினை மேலும் கூர்மையாக்கியது. இன அமைதிக்குஎதிரான சிங்கள இனவாதிகள், அரசியல் மேலாண்மை பெற அந்தத் தேர்தல் வழிவகுத்துவிட்டது.

தமிழர் விரோத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா கணிசமான இடங்களில் வென்று நாட்டின் பிரதான மூன்றாவது பெரிய கட்சியானது.இந்த தமிழர் விரோத கட்சியை அரவணைத்து, நட்பு பாராட்டி கூட்டணி அரசு அமைத்தார் சந்திரிகா.

அதே நேரத்தில் தமிழர் பகுதிகளில் தமிழ்த் தேசியம் அந்தத் தேர்தலில் எழுச்சி பெற்றது. தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதியாக எங்கள்இயக்கத்துக்கு அங்கீகாரம் கிடைத்தது. எங்கள் இயக்கத்தில் தன்னாட்சி நிர்வாகத் திட்டத்துக்கு மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்தது.

இதைத் தொடர்ந்து அமைதி முயற்சிகளை முன்னெடுக்கத் தொடங்கினோம். சுயாட்சி அதிகாரத் திட்டத்தின் கீழ் பேச்சு ஆரம்பிக்க தயார்என்று அறிவித்தோம்.

ஆனால், அதை ஜேவிபி எதிர்த்தது. அரசைக் கவிக்கப் போவதாக மிரட்டியது. இது சந்திரிகாவுக்கு பெரும் சவாலாக அமைந்தது. அதேநிலையே இப்போதும் நீடிக்கிறது. உலக நாடுகளின் நெருக்கடி, பொருளாதார சீர்குலைவு என பல விதத்திலும் சந்திரிகா அரசுநிலைகுலைந்து நிற்கிறது.

இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு காண எங்களுடன் பேச்சு நடத்தித் தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தமும் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால்,ஆளும் கூட்டணிக்குள் நிலவும் வேறுபாடுகளால் அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிக்க முடியாத நிலை.

போர் வெறி பிடித்த ராணுவத்தாலும், ஜேவிபி போன்ற தீவிர இனவாத சக்திகளுடனும் கூட்டணி வைத்துக் கொண்டு சந்திரிகாவால்தெளிவான கொள்கையை முன் வைத்து பேச்சு நடத்த முன் வர முடியவில்லை.

ஆனால், இந்த யதார்த்தமான உண்மையை மறைத்துவிட்டு எங்கள் மீது பழி போட முயற்சி நடக்கிறது.

இடைக்கால நிர்வாகத் திட்டத்தில், இனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணுவது தொடர்பான திட்டத்தையும் சேர்க்கச் சொல்கிறது சந்திரிகாஅரசுய நாம் இடைக்கால நிர்வாகம் கேட்க, சந்திரிகா அரசோ இனப் பிரச்சனைக்கு தீர்வு பற்றி பேசுகிறது.

ஆனால், புலம் பெயர்த்த தமிழர்களையும், இங்கே போரினால் வாழ்விழந்தவர்களுக்கும் உடனடியாக புனர்வாழ்வு தர வேண்டியஅவசியம், அவசரம் உள்ளது. இதனால் தான் இடைக்கால நிர்வாகத்தை உடனே வேண்டும் என்கிறோம்.

மக்களின் அன்றாட சுமையும் பிரச்சனையும் உடனே தீர்க்கப்பட வேண்டும். இதனால் தான் உடனே இடைக்கால நிர்வாகம் கேட்கிறோம்.இதன் பின்னர் தான் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது பற்றி பேச்சு நடத்த முடியும்.

தமிழீழத்தில் நிலவும் வாழ்வின் நிதர்சனத்தின் அடிப்படையில் தான் இந்தக் கோரிக்கையை முன் வைக்கிறோம். ஆனால், சந்திரிகாவோஇனப் பிரச்சனைக்குத் தீர்வு காண பேச அழைக்கிறார்.

ஜேவிபியை சமாதானப்படுத்தவும், இனப் பிரச்சனையில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர் போல உலக நாடுகளுக்கு காட்டிக்கொள்ளவும், இனப் பிரச்சனையை விவாதிக்கிறோம் என்று பேச்சுவார்த்தையை முடிவின்றி இழுத்தடிக்கவும் தான் சந்திரிகா திட்டம்போடுகிறார்.

சந்திரிகாவின் அரசு தமிழர்களுக்கு இடைக்காலத் தீர்வோ, நிரந்தர தீர்வையோ தரப் போவதில்லை. காலம் காலமாக பேச்சு நடத்திஏமாற்றப்பட்ட நாங்கள், இனியும் வஞ்சிக்கப்பட்ட வரலாற்றுப் பாதையில் செல்ல விரும்பவில்லை. அதற்குத் தயாராக இல்லை.

சிங்கள பெளத்தப் பேரினவாதச் சகதிக்குள் புதைந்து கிடக்கும் அரசியல் அமைப்புகள் தமிழீழ மக்களின் அரசியல் விருப்பங்களைஒருபோதும் புரிந்துகொள்ளப் போவதில்லை. அவைகள் தமிழரின் அடிப்படை பிரச்சினைகளைக் கூட அங்கீகரிக்கத் தயாராக இல்லை.

வடகிழக்கு மாநிலம் தமிழர்களின் வரலாற்றுத் தாயகம் என்பதையோ, தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதையோ தமிழீழ மக்களுக்குப்பிரிந்துசெல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமையுண்டு என்பதையோ எந்தவொரு சிங்கள அரசியல் கட்சியும் ஏற்றுக்கொள்ளத்தயாராகவில்லை.

இது ஒரு புறமிருக்க சிங்கள அரசியல் கட்சிகள் மத்தியில் முரண்பாடுகள் கொண்ட கொள்கைகளையே காணமுடிகிறது. இப்படிக்குளறுபடியான, அப்பட்டமான இனவாதம் பேசும் கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமைவகிக்கும் சந்திரிகா, இனப் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காண்பது குறித்து அக்கறை காட்டுவது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.

ஆளுங் கட்சி கூட்டணியிடம் விடுதலைப் புலிகள் சார்பில் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தமிழ் மக்களது அடிப்படை பிரச்சினைகளைஅவர்களது மூலாதாரக் கோரிக்கைகளான தேசீயம், சுயநிர்ணய உரிமை குறித்த உங்களது கொள்கை நிலைப்பாட்டினை அதிகாரப்பூர்வமாகதெரிவியுங்கள்.

இது குறித்து உங்களிடம் தெளிவான பார்வையும் ஒத்திசைவான நிலைப்பாடும் நிலவுமானால் இதற்கு நிரந்தரமான தீர்வுபற்றிப்பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமுண்டு. இல்லையென்றால் நிரந்தரத் தீர்வு குறித்துப் பேசுவதில் அர்த்தமில்லை.

சிங்கள அரசியல் கட்சிகளிடம் இருந்து நியாயமான நிரந்தரத் தீர்வு கிடைக்கப்போவதில்லையென்ற உண்மையை உணர்ந்துதான்இடைக்காலத் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைத்தோம். ஆனால் சந்திரிகாவின் அரசு அதை நிராகரித்து, நிரந்தரத் தீர்வு என்ற சாக்குச்சொல்லி சமாதான முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறது.

சமாதானத்தின் விரோதிகளையும் இனவாத சக்திகளையும் தனது கூட்டாட்சித் திரைக்குள் மூடிமறைத்து, புலிகள் மீது சந்திரிகா வீண்பழிசுமத்த முனைகிறார். சமாதான முகமூடி அணிந்து நடிக்கும் சந்திரிகாவின் உண்மை முகத்தைச் சர்வதேச சமூகம் அடையாளம்கண்டுகொள்ளும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

சிங்கள அரசானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. பிரிந்து சென்று தனித்து வாழ விடுவதாகவும்இல்லை. இந்த இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்காலச் நம்பிக்கையின்றி சூனியமான அரசியல்இருட்டுக்குள் நாங்கள் தொடர்ந்து வாழமுடியாது.

பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லை உண்டு. அந்த எல்லைக் கோடுகளை நாங்கள் அடைந்துவிட்டோம். இந்த நெருக்கடியானநிலையில், இலங்கை அரசுக்கு ஒரு அவசர கோரிக்கை ஒன்றை வைக்கிறோம்.

நாங்கள் முன்வைத்த இடைக்கால சுயாட்சி திட்டத்தின் கீழ் நிபந்தனையற்ற முறையில், காலம் தாமதிக்காமல் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவேண்டும்.

இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, மேலும் காலத்தை இழுத்தடித்து எமது மக்களின் துயர வாழ்வை நீடித்துச் செல்ல சிங்கள அரசுமுற்படுமானால், எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

எங்களது இந்த இக்கட்டான நிலையை தமிழரின் இனப்பிரச்சினையில் அக்கறையுடைய உலக நாடுகள் கருத்தில் கொண்டு, அமைதிப்பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி இலங்கை அரசுக்கு நெருக்குதல் தர வேண்டும்.

எமது மண்ணின் விடியலுக்காகவும், எமது மக்களின் விடுதலைக்காகவும் போராடி வீழ்ந்த எமது வீரர்களை நினைவு கூறும் இப் புனிதநாளில், தேச விடுதலை என்ற அவர்களது லட்சியக் கனவை எத்தகைய துன்பங்கள் வந்துபோதும் நிறைவு செய்வோம் என்றுஉறுதிபூணுகிறோம்.

இவ்வாறு பிரபாகரன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+