கற்பழிப்பு- கொலை வழக்கில் சாமியார் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இளம் பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் கொடுமைகளை செய்து கொலை செய்ததாக ஒரு சாமியாரைபோலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவர் ஆலந்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், எனது மகள்ரஜினி கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 15 நாட்களாக அவரைக்காணவில்லை.

இந் நிலையில், ஆலந்தூரில் உள்ள நவசக்தி கருமாரியம்மன் கோவில் பூசாரியான சம்பந்தம் என்பவர் எனதுமகளை மூளைச் சலவை செய்து தனது கோவிலிலேயே தங்க வைத்து விட்டதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து நான் அங்கு சென்று எனது மகளை சந்தித்தேன். வீட்டுக்கு வந்து விடுமாறு கூறினேன். ஆனால் அவள்வர மறுத்து விட்டாள். மீண்டும் ஒரு முறை சந்தித்தபோது, தனக்கு பாலியல் கொடுமை நடப்பதாக கூறினாள்.

ஆனால் அதற்குள் சாமியார் வந்து எனது மகளை உள்ளே அழைத்துச் சென்று விட்டார். அதன் பிறகு என்னால்எனது மகளைப் பார்க்க முடியவில்லை.

இந் நிலையில் எனது மகள் இறந்து விட்டதாகவும், அவரது உடலுக்கு சாமியார் சம்பந்தமும் மேலும் சிலரும்சேர்ந்து ஈமக் கிரியைகள் செய்வதாக எனக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு ஓடினேன். அப்போது அங்கு எனது மகளின் உடலுக்கு அவர்கள் தீ வைத்துக்கொண்டிருந்தனர்.

எனது மகளை சம்பந்தம் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார். அதன் பின்னர் கொலை செய்துள்ளார்.எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார் பாலசுப்ரமணியம்.

இதையடுத்து ஆலந்தூர் போலீஸார் சம்பந்தத்தை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+