2 மாத பெண் சிசுவை கொன்ற தந்தைக்கு வலைவீச்சு
மதுரை:
மதுரை அருகே உசிலம்பட்டியில் பிறந்து 2 மாதமே ஆன பெண் சிசுவை கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தையை போலீஸார் தேடிவருகிறார்கள்.
உசிலம்பட்டி அருகே உள்ள கண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிராஜா. இவரது மனைவி செல்விக்கு 2 மாதங்களுக்கு முன்புபெண் குழந்தை பிறந்தது.
பெண் குழந்தை பிறந்ததை விரும்பாத சீனிராஜா, தனது குழந்தையை கொன்று விடப் போவதாக கூறி வந்தார். இதனால்செல்வியின் உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி, குழந்தையை தாங்கள் வளர்த்துக் கொள்வதாகவும் அதைக் கொன்று விடவேண்டாம் என்றும் கூறியிருந்தார்கள்.
இந் நிலையில் தனது குழந்தையை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார் சீனிராஜா.அதிர்ச்சி அடைந்த செல்வி இதுகுறித்து செக்கானூரணி போலீஸில் புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் போலீஸார் சீனிராஜாவைத் தேடி வருகிறார்கள். உசிலம்பட்டியில் சில காலமாக இல்லாமல் இருந்து வந்த பெண்சிசுக் கொலை மீண்டும் தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications