செக்ஸ் புகார்: மருத்துவமனையில் நகை கடை அதிபர்
சென்னை:
பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை ரகசிய கேமராக்கள் மூலம் பார்த்து ரசித்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் சென்னைகோடம்பாக்கம் விஸ்வாஸ் நகைக் கடை அதிபர் விஸ்வநாதனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர் விசாரணைக்குப்பயந்து அவர் உடல் நலம் சரியில்லை என்று கூறி தனியார் மருத்துவமனையில் சேர்ந்து விட்டார்.
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட நகைக் கடை விஸ்வாஸ் கோல்ட் மார்ட். துபாயிலும் இதன் கிளைஉள்ளது. இந்தக் கடையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்கள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார்கொடுத்தனர்.
அதில், தாங்கள் உடை மாற்றுவதை ரகசியக் கேமராக்கள் மூலம் கடை உரிமையாளர் பார்த்து ரசிப்பதாகவும், எங்களது உடல்அழகை ரசித்து ஆபாசமாக கமெண்ட் அடிப்பதாகவும் தெரிவித்திருந்தனர். மேலும் இதைத் தட்டிக் கேட்டால் கல்விச் சான்றிதழைதர மறுப்பதாகவும், திருட்டுப் புகார் சுமத்துவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்தப் புகாரையடுத்து தியாகராய நகர் துணை கமிஷனர் முருகன் தலைமையிலான போலீஸ் படை விஸ்வாஸ் கோல்ட் மார்ட்கடைக்கு விரைந்தது. கடை முழுவதும் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். கடை உரிமையாளர் விஸ்வநாதனிடமும்போலீஸார் விசாரணை நடத்தினர்.
பின்னர் விசாரணைக்குத் தேவைப்பட்டால் காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்று விஸ்வநாதனிடம் போலீஸார் தெரிவித்துவிட்டுச் சென்றனர். போலீஸார் சென்றதும் விஸ்வநாதன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று உடல் நலம்சரியில்லை என்று கூறி சேர்ந்து விட்டார்.
இருதய நோய் இருப்பதால் தனது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு வர இயலாத நிலைஏற்பட்டுள்ளதாகவும் அவரது சார்பில் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications